Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாபிச்சைக்காரன் 2,பர்ஹானா, ஒடிடியில் வெளியானது.. எதில் தெரியுமா?

பிச்சைக்காரன் 2,பர்ஹானா, ஒடிடியில் வெளியானது.. எதில் தெரியுமா?

என்னதான் திரையரங்குகளில் சென்று திரைப்படங்களைப் பார்த்து மகிழ்ந்தாலும் தற்பொழுது உள்ள தலைமுறைகள் ஓடிடியில் பார்த்து ரசிப்பதை தான் பெரும் அளவில் விரும்புகிறார்கள்.

- Advertisement -

ஏனென்றால் இந்த பிசியான உலகத்தில் தியேட்டருக்கு சென்று குடும்பங்களுடன் படம் பார்ப்பது மிகவும் குறைந்துவிட்டது. அப்படிப்பட்டவர்களுக்காகவே இந்த ஓடிடியில் திரைப்படங்களை வெளியிடுவது சிறந்ததாக இருக்கிறது.

இந்த வகையில் தற்பொழுது ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் எத்தனை தமிழ் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டிருக்கிறது என்ற பட்டியல் தற்பொழுது வெளியிடப்பட்டிருக்கிறது. அது என்னவென்று பார்ப்போம்.

- Advertisement -

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த பர்சானா திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்படுவதற்கு பல சர்ச்சைகளை எதிர்கொண்டது. இது இஸ்லாமிய பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் இதற்கு பல எதிர்ப்புகள் இருந்து வந்தது தற்பொழுது இந்த திரைப்படம் சோனி லைவ் என்ற ஒடிபியில் வெளியிடப்பட்டிருக்கிறது.

- Advertisement -

நடிகர் சாந்தனு மற்றும் ஆனந்தி நடித்த ராவண கூட்டம் என்ற திரைப்படம் இயக்குனர் விக்ரம் சுகுமாரனார் இயக்கப்பட்டது. இவர் இதற்கு முன்பு மதயானை கூட்டம் என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடித்த தமிழரசன் திரைப்படம் ஜீ 5 விலும் மேலே குறிப்பிட்டு இருக்கும் பர்சானா இராவண கூட்டம் திரைப்படங்களும் ஜூன் பதினாறாம் தேதியான நேற்று ஓடிடிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது.

மேலும் விஜய் ஆண்டனி இயக்கி நடித்த பிச்சைக்காரன் 2 திரைப்படமும்,
ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் மணிகண்டனை கதாநாயகனாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் குட் நைட் இது ஒரு ரொமான்டிக்கான நகைச்சுவை திரைப்படம் ஆகும் இந்தத் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஜூன் 17 தேதி யான இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படி ஜூன் மாதம் அடுத்தடுத்து ரசிகர்களை கவர்ந்த திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி இருப்பதால் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.

Most Popular