Saturday, April 20, 2024
- Advertisement -
Homeசினிமாதமிழ் சினிமாவில் 100 கோடி வசூல் செய்த படங்கள்.. எந்த ஹீரோக்கு எத்தனை தெரியுமா?

தமிழ் சினிமாவில் 100 கோடி வசூல் செய்த படங்கள்.. எந்த ஹீரோக்கு எத்தனை தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமா கடந்த பத்தாண்டுகளில் வசூலை பொறுத்தவரை பல்வேறு உச்சத்தை தொட்டுள்ளது. இதற்கு வித்திட்டது 2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி திரைப்படம் என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழ் சினிமா வரலாற்றிலே முதல்முறையாக 100 கோடி ரூபாய் வசூல் செய்த திரைப்படம் என்றால் அது சிவாஜி தான்.

அதன் பிறகு எந்திரன், தசாவதாரம் போன்ற படங்கள் வசூல் சாதனை நிகழ்த்தின. இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள வாரிசு, துணிவு திரைப்படங்களும் 100 கோடி வசூலை எட்டிருக்கிறது. இந்த நிலையில் எந்த நடிகர்களுக்கு அதிக 100 கோடி ரூபாய் படம் வசூலாகி இருக்கிறது என்று தற்போது பார்க்கலாம். அதிகபட்சமாக நடிகர் விஜயின் 11 திரைப்படங்கள் 100 கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூல் ஆகி இருக்கிறது.

- Advertisement -

துப்பாக்கி, கத்தி ,புலி ,தெறி, பைரவா, மெர்சல், சர்க்கார், பிகில், மாஸ்டர், பீஸ்ட் ,வாரிசு ஆகிய படங்கள் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது. இதில் புலி திரைப்படம் 101 கோடி ரூபாயை வசூல் செய்தாலும் அது தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு தோல்வியை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 9 படங்களுடன் இருக்கிறார்.

- Advertisement -

சிவாஜி, எந்திரன், லிங்கா, கபாலி, காலா ,2.0, பேட்ட ,தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் இந்த மைல் கல்லை எட்டிருக்கிறது. இதன் பிறகு மூன்றாவது இடத்தில் நடிகர் அஜித் 6 படங்களுடன் இருக்கிறார். வேதாளம், விவேகம், விசுவாசம், நேர்கொண்ட பார்வை,வலிமை, துணிவு ஆகிய படங்கள் அஜித்துக்கு இந்த 100 கோடி ரூபாய் மைல் கல்லை எட்டிருக்கிறது. இதன் பிறகு விக்ரம், சிவகார்த்திகேயன் ,லாரன்ஸ், கார்த்தி ஆகியோர் தலா இரண்டு படங்களுடனும் நடிகர் தனுஷ் ஒரு படத்துடன், ஜெயம் ரவி ஒரு படத்துடன் 100 கோடி ரூபாய் கிளப்பில் இடம் பெற்று இருக்கிறார்கள். ஆனால் இப்போது 100 கோடி என்பது விஜய், அஜித் படங்களுக்கு மிகவும் சர்வ சாதனமாக மாறிவிட்டது. இதனால் 200 கிளப் 300 கிளப் என்று தரத்தை அவர்கள் தங்களுக்குள்ளேயே உயர்த்தி கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular