பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது இந்தப் படம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய காவியத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த படத்திற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தரப்பினர் ரசிகர்களாக உள்ளனர்.
ஆனால் இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கு தமிழகத்தில் பெரிய சறுக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. பொதுவாக பெரிய ஹீரோக்கள் நடித்திருக்கும் படங்கள் எல்லாம் அதிகாலை 4 மணிக்கு காட்சிகள் போடப்படும். ஆனால் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்கு அப்படி எந்த சிறப்பு காட்சிகளும் போடப்படவில்லை.
திரையரங்கு உரிமையாளர்கள் சிறப்பு காட்சிகளை போட தமிழக அரசிடம் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் துணிவு திரைப்படம் ரிலீசின் போது ஏற்பட்ட கொண்டாட்டத்தில் இளைஞர் ஒருவர் லாரி மீது ஏறி கீழே விழுந்து உயிரிழந்தார். இதனை அடுத்து சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்க மறுத்து வருகிறது.
மேலும் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை தினத்திற்கு மட்டும் தான் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி என்றும் மற்ற நாட்களில் வெளியாகும் படங்களுக்கு எந்த சிறப்பு காட்சியும் கிடையாது என்று தமிழக அரசு அதிகாரிகள் கூறிவிட்டார்களாம்.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் போடப்படுகிறது. ஆனால் பக்கத்து மாநிலமான கேரளாவில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சி போடப்படுகிறது. இதே போன்று பெங்களூருவில் காலை 6 மணிக்கு சிறப்பு காட்சிகள் போடப்படுகிறது.
இதே போன்று உலகத்திலேயே முதல் முறையாக அமெரிக்காவில் தான் இந்திய நேரப்படி இரவு 1:00 மணிக்கு பொன்னியின் செல்வன் 2 படத்தின் காட்சிகள் திரையிடப்படுகிறது. இதன் காரணமாக உலகத்தில் பலரும் பார்த்த பிறகு தான் தமிழகத்தில் தமிழக ரசிகர்கள் பொன்னியின் செல்வனை பார்க்க இருக்கிறார்கள்.