Tuesday, November 19, 2024
- Advertisement -
Homeசினிமாதரம் கெட்டு போகும் தமிழ் சினிமா பாடல்கள்.. குப்பை லிரிக்ஸ் உடன் வெளியான சிவகார்த்திகேயன் பாடல்

தரம் கெட்டு போகும் தமிழ் சினிமா பாடல்கள்.. குப்பை லிரிக்ஸ் உடன் வெளியான சிவகார்த்திகேயன் பாடல்

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் இருந்தே, பாடல்கள் என்றாலே அதில் நல்ல கருத்து நிறைந்து இருக்கும். 70 80களில் இருந்தே இந்த நடைமுறை பாடலுக்கென்று இருந்தது பிளாக் அண்ட் வொயிட்  திரைப்படங்களில் கூட நிறைய கருத்து நிறைந்த பாடல்கள் இடம்பெற்றிருக்கும். 70களில் வந்த படங்களில் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே, நான் ஆணையிட்டால் போன்ற பல பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது.

அதேபோல் 80களில் வந்த திரைப்படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமலஹாசன் போன்ற பல முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் கருத்து நிறைந்த பாடல் இருக்கும். முத்து திரைப்படத்தில் வரும் ஒருவன் ஒருவன் முதலாளி ,உன்னால் முடியும் தம்பி  போன்ற பாடல்கள் இருந்திருக்கிறது .தாயைப் போற்றும் வகையில் நானாக நானில்லை தாயே அம்மா என்றழைக்காத உயிரில்லையே போன்ற பல பாடல்களை கொண்டு வளர்ந்திருக்கிறது தமிழ் சினிமா.

- Advertisement -

அதேபோல் 90s களிலும் பாடல்கள் கருத்து நிறைந்தவையாக தான் இருந்தது. அதிலும் சந்தோஷம் சந்தோஷம் வாழ்க்கையில் பாதி பலம போன்ற பாடலின் கருத்து இன்றுவரை மக்களால் பேசப்பட்டு வருகிறது. அதைக் கேட்கும் பொழுது மனதில் ஒரு புத்துணர்ச்சி ஏற்படும்.  வரிகளும் துல்லியமாக பாமர மக்களுக்கும் புரியக்கூடிய வகையில் இருக்கும் பாடல் வரிகளும் மிக அழகான முறையில் இருக்கும்.

- Advertisement -

ஆனால் தற்போதைய கால தமிழ் சினிமா அப்படி இல்லை. எழுதுபவரை தவிர வேறு யாருக்கும் இதனிடையே வரிகள் பெரும்பாலும் புரிவதில்லை. ஒரு சில பாடல்கள் வரிகள் புரியாவிட்டாலும் இசையால் அது வெற்றி பெறுகிறது. பீஸ்ட் திரைப்படத்தில் வரும் ஆலமத்தி அபிபு என்ற பாடலின் விளக்கம் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அந்தப் பாடல் இன்றுவரை வெற்றி பெற்று தான் வருகிறது. சர்க்கார் திரைப்படத்தில் கூட சிம்டாங்காரன் என்ற பாடலுக்கு இன்றுவரை ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளது. ஆனால் அதன் விளக்கம் யாரும் அறிந்திடாத ஒன்றுதான்.

ஆனால் சில பாடல்கள் வரிகளும் புரிவதில்லை இசையும் நன்றாக இருப்பதில்லை. தல அஜித் நடித்த துணிவு திரைப்படத்தில் உள்ள பாடல்கள் கூட அப்படி ஒரு நிலையில் தான் அமைந்திருந்தது. பாராட்டத்தக்க விஷயம் என்று அது எதுவுமே இல்லை.

இதே போன்று சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் படத்தின் scene ah scene ah என்ற பாடல் இன்று வெளியானது. இதன் பாடல் வரிகள்,இசை வாய்க்கு விளங்கவில்லை. கேட்டால், இது டிரெண்ட் என்று சொல்கிறார்கள்.
இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம்தான் நிகழ்கிறது. பாடலுக்கென்றே பல ரசிகர்கள் தமிழ் சினிமாவிற்கு இருக்கிறார்கள் அவர்களை தக்க வைத்துக் கொள்ளும் அளவிற்கு இனி வரக்கூடிய பாடல்கள் அமைந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Most Popular