Wednesday, May 15, 2024
- Advertisement -
Homeசினிமாமீண்டும் அஜித்துடன் இணையும் தமன்னா.. ! ஷூட்டிங் எப்போது அறிவிப்பு.. !

மீண்டும் அஜித்துடன் இணையும் தமன்னா.. ! ஷூட்டிங் எப்போது அறிவிப்பு.. !

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் அடுத்து நடிக்கவிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் துவங்கவில்லை. துணிவு படத்துடன் வந்த வாரிசுக்கு பிறகு விஜய் அடுத்தப் படத்தையே முடித்துவிட்டார் ஆனால் அஜித்தோ அதே இடத்தில் தேங்கிக் கிடக்கிறார் என பல்வேறு பேச்சுகள் சமூக வலைதளங்களில் போய்க் கொண்டிருக்கிறது.

- Advertisement -

விடாமுயற்சி படம் துவங்கும் நேரத்தில் லைகா நிறுவனத்தின் சில தனிப்பட்ட சிக்கல்களும் சந்தித்தது. ஜூன் முதல் வாரம் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஷூட்டிங் மெதுவாக ஜூலைக்கு தள்ளப்பட்டு தற்போது அடுத்த மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 21ஆம் தேதி மகிழ் திருமேனி படப்பிடிப்பை துவங்கவிருக்கிறார் என தகவல்கள் கிடைத்துள்ளது.

இதுவரை அஜித் 62வது படத்தின் தலைப்பாக விடாமுயற்சி, அதனுடைய ஓர் போஸ்டர், இயக்குனர் மகிழ் திருமேனி, இசையமைப்பாளராக அனிருத் என்ற அப்டேட்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இடையே அஜித்துடன் இரண்டாவது முறையாக அருண் விஜய் நடிக்கப் போவதாகவும் கூடவே அர்ஜுன் தாஸ் இணைவதாகவும் பேச்சுகள் பரவின. எதுவும் இன்னும் அதிகாரபூர்வமாக உறுதியாகவில்லை.

- Advertisement -

விடாமுயற்சி ஹீரோயின்

இப்படத்தின் அறிவிப்புக்கு முன்பே அஜித்துடன் திரிஷா நடிக்கப் போவதாக தகவல்கள் வந்தன. ஆனால் எந்தத் தகவலையுமே படக்குழு அறிவிக்காமல் மிகவும் மெத்தனமாக செய்யபடுகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் ஏமாற்ற நிலையில் இருக்கிறார்கள்.

- Advertisement -

தற்போது கிடைத்துள்ள தகவலின் படி வீரம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த தமன்னா மீண்டும் அவருடன் இணைவதாக தெரிகிறது. அண்மையில் மிகப் பெரிய கம்பேக்கை தமன்னா கொடுத்துள்ளார். புதிய கிளாமர் லுக்கில் ஜீ கார்டா, லாஸ்ட் ஸ்டோரிஸ், ஜெயிலர் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தேள்ளார்.

த்ரிஷா தமிழில் பொன்னியின் செல்வன் 1 & 2, லியோ என அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்துவிட்டு மலையாளத்தில் குதித்துள்ளார். அவர் அஜித்துடன் இணைவது சற்று கடினமான ஒன்று. அதனால் தமன்னாவை அஜித் படத்தில் எதிர்பார்க்கலாம்.

Most Popular