Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாஅடுத்த விஜய்க்கு ஸ்கெட்ச் போட்ட தில் ராஜூ..! புது பிளானை இறக்கினார்

அடுத்த விஜய்க்கு ஸ்கெட்ச் போட்ட தில் ராஜூ..! புது பிளானை இறக்கினார்

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பாளராக விளங்குபவர் தில் ராஜு. இவர் வாரிசு திரைப்படம் மூலம் தமிழில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவில் சுமார் 600 திரையரங்குகள் இவரது கட்டுப்பாட்டில் இருக்கிறது. தில்ராஜு கோடு போட்டால் ரோடு போடும் அளவிற்கு தெலுங்கு சினிமா இவரது கையில் இருக்கிறது. உதாரணத்திற்கு தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆக ஒரு காலத்தில் ஆட்சி செய்த சிரஞ்சீவி படம் தற்போது தில்ராஜுவின் வாரிசு ஓடு போட்டி போடுவதால் திரையரங்குகள் கிடைக்காத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

அந்த அளவிற்கு தில் ராஜு சக்தி படைத்த படத்தயாரிப்பாளராக இருக்கிறார். தெலுங்கு சினிமாவில் தாம் செலுத்தி வரும் ஆதிக்கத்தை தமிழிலும் தொடர வேண்டும் என தில் ராஜு நினைக்கிறார். இதற்காக அவர் ரெரட் ஜெயின்ஸ் வழியை கடைப்பிடிக்கிறார். எப்படி ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனம் விஜயை வைத்து குருவி படத்தை தயாரித்து தமிழ் சினிமாவில் நுழைந்ததோ அதேபோல் வாரிசு மூலம் தில் ராஜு தமிழ் சினிமாவுக்குள் நுழைந்து இருக்கிறார்.

- Advertisement -

தற்போது தில் ராஜு அடுத்த ஒரு யுத்தியை கையாளுகிறார் அதாவது தெலுங்கில் பிரபலமாக இருக்கும் இயக்குனர்களை கொண்டு தமிழில் டாப் ஹீரோக்களை வைத்து படம் செய்யும் திட்டமே அது. இதன் மூலம் தெலுங்கு தமிழ் என இரண்டு மார்க்கெட்டையும் பிடித்து விடலாம் என்பது தில்ராஜுவின் திட்டம். தற்போது அந்தத் திட்டத்திற்கு தில் ராஜு தேர்வு செய்திருக்கும் நபர் அடுத்த விஜய் என்று கணிக்கப்படும் சிவகார்த்திகேயன் தான்.

- Advertisement -

சிவகார்த்திகேயனின் படம் சுமாராக இருந்தாலும் கோடி கணக்கில் வசூல் ஆவதால் அவரை தில்ராஜு அணுகி டேட் கேட்டிருக்கிறார். தெலுங்கு மார்க்கெட்டுக்காக சிவகார்த்திகேயனும் ஒப்பு கொண்டிருக்கிறார். இதனை வைத்து டிஜே துவாடா  ஜெகநாதன் என்ற படத்தை இயக்கிய ஹரிசங்கரை வைத்து புதிய படத்தை தயாரிக்க தில் ராஜு முடிவெடுத்திருக்கிறார். ஹரி ஷங்கர் சொன்ன கதை சிவகார்த்திகேயனுக்கு பிடித்துப் போக மாவீரன் ஷூட்டிங்கிற்கு பிறகு இந்த படத்திற்கான வேலைகள் ஆரம்பமாகி விடும்

இதனால் தில் ராஜு அடுத்தடுத்து பெரிய தமிழ் நட்சத்திரங்களை வளைத்து போட்டு லாபம் ஈட்டுவதனுடன் தமிழ் திரையரங்குகளையும் ஆக்கிரமிக்க திட்டம் போட்டு இருக்கிறார். தமிழ் சினிமாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகிறது. இதனால் காலம் காலமாக படமெடுத்து வந்த தயாரிப்பாளர்களுக்கு தற்போது தொழில் இல்லை. இந்த இடத்தை நிரப்பவே தில் ராஜு முடிவெடுத்திருக்கிறார்.

Most Popular