Friday, March 29, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜயை பார்த்து காப்பி அடிக்கும் அஜித்? லைகாவின் அமோக பிளான் ரெடி

விஜயை பார்த்து காப்பி அடிக்கும் அஜித்? லைகாவின் அமோக பிளான் ரெடி

- Advertisement -

கடந்த பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியான துணிவு திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் தன்னுடைய 62 ஆவது படமான ஏகே 62 என்று திரைப்படத்தை நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தின் உடைய அப்டேட்ஸ் ஆரம்பத்திலிருந்து பல மாற்றங்களையும் குழப்பங்களையும் கொண்டதாகவே இருந்து வருகிறது.

ஏகே 62 திரைப்படத்தை முதலில் இயக்க இருந்தது இயக்குனர் விக்னேஷ் சிவன் என்று கூறப்பட்டது. விக்னேஷ் சிவனின் கதை தல அஜித்திற்கு திருப்தி அளிக்காததால் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார் என்ற தகவல் வெளியானது. அதேபோல் இந்த திரைப்படத்திற்கு முதலில் இசையமைக்க இருந்தது இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டதால் அனிருத் திரவிச்சந்திரனும் இந்த திரைப்படத்தில் பணியாற்ற விரும்பாமல் விலகி விட்டார் என்ற தகவலும் வெளிவந்து உறுதி செய்யப்பட்டது.

- Advertisement -

தற்பொழுது இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்பதும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கவில்லை என்பதும் தான் உண்மை. இதைத்தொடர்ந்து இவர்களுக்கு மாற்றாக இயக்குனர் மகில் திருமேனி ஏ கே 62 திரைப்படத்தை இயக்க இருந்தார். ஆனால் அதிலும் சில சர்ச்சை ஏற்பட்டது திரைப்படக் கதையை எழுதி முடிப்பதற்கு இன்னும் இரண்டு மாத காலம் அக வாசம் கேட்டதாகவும் லைக்கா தயாரிப்பு நிறுவனம் உடனடியாக கதை வேண்டும் என்று கூறியதனால் மகிழ்திருமேனிக்கு பதிலாக இயக்குனர் சுந்தர்சியுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் ஒன்று வெளியானது.

- Advertisement -

இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான தகவல் ஏகே 62 வை பற்றி ஒரு தகவல் வெளிவந்தது கடந்த வாரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 67 திரைப்படத்தின் லியோ பெயரையும் திரைப்படத்தை வெளியிடும் தேதியையும் ஒரு அழகான டீசருடன் படக்குழுவினர்கள் வெளியிட்டு இருந்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் ஏகே 62 திரைப்படத்தின் உடைய பெயரையும் டீசருடன் படக்குழுவினர்கள் வெளியிட இருக்கிறார்கள் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் இந்த திரைப்படத்தை இயக்குவது இயக்குனர் மகில் திருமேனி தான் என்றும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க இருக்கிறார் என்று தகவலும் வெளிவந்திருக்கிறது.

ஆனால் இந்த ஆண்டு இறுதிக்குள்  ஏ கே 62 திரைப்படத்தின் உடைய பெயர் மற்றும் வெளியிடக்கூடிய தேதியை டீசருடன் வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது . இதனால் தல ரசிகர்கள் ஏகே 62 திரைப்படத்தின் உடைய அப்டேட்ஸ்களுக்காக காத்திருக்கிறார்கள்.

Most Popular