Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாஅஜித் 62 படத்திற்கு 200 கோடி பட்ஜெட்? தலயின் சம்பளம் கேட்டா மயங்கிடுவீங்க!

அஜித் 62 படத்திற்கு 200 கோடி பட்ஜெட்? தலயின் சம்பளம் கேட்டா மயங்கிடுவீங்க!

- Advertisement -

துணிவு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தல 62 படத்திற்கான பட்ஜெட்டை தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த ஜனவரி 11-ம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியான துணிவு திரைப்படம் பெரிய வெற்றியை பெற்றது. முந்தைய அஜித் படங்களை விட அதிக வசூலை இந்த படம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் ஏகே 62 படத்திற்கான வேலைகள் ஏற்கனவே தொடங்கி விட்டது. இந்த படத்தில் சந்தானம்,அரவிந்த்சாமி, அர்ஜுன் தாஸ் ,திரிஷா, நயன்தாரா போன்ற பெரிய பட்டாளங்களை நடிக்க உள்ளனர். இந்த படத்தை பெரிய அளவில் எடுக்க இயக்குனர் விக்னேஷ் சிவன் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் பெரிய நட்சத்திரங்கள் இணைந்துள்ளதால் படத்தின் பட்ஜெட் அதிகரிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

குறிப்பாக நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த வருகிறார்.இந்த நிலையில் மீண்டும் அஜித்க்காக ஒரு முக்கிய ரோல் நடிக்க ஒப்பு கொண்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் 7 கோடி ரூபாய் சம்பளம் கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்று மற்ற நட்சத்திரங்களுக்கும் சம்பளம் அதிகமாக தரப்பட்டுள்ளது. இதன் காரணமாக படத்தின் முந்தைய பட்ஜெட்டை விட தற்போது அதிகரிக்கப்பட்டு மொத்தமாக 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்ய சுபாஷ்கரண் முடிவெடுத்துள்ளார்.

- Advertisement -

இதில் நடிகர் அஜித்துக்கு மட்டும் 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏகே 62 படத்திற்கான ஓடிடி உரிமத்தை netflix பெரும் தொகை கொடுத்து வாங்கி இருக்கிறது. துணிவு திரைப்படம் தமிழகத்தில் மட்டும் தயாரிப்பாளருக்கு 60 முதல் 70 கோடி ரூபாய் ஷேர் எனப்படும் லாபத்தை கொடுக்கும் என்பதால் ,ஏகே 62 படத்தை 70 கோடி ரூபாய்க்கு தமிழகத்தில் விற்க சுபாஸ்கரன் முடிவெடுத்துள்ளார் .மேலும் அஜித்தின் வெளிநாட்டு மார்க்கெட் துணிவு  படத்தின் மூலம் அதிகரித்துள்ளதால் அதனையும் சொந்தமாக ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதன் காரணமாக பட்ஜெட் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Most Popular