Wednesday, April 24, 2024
- Advertisement -
Homeசினிமாதல 62 படத்தின் பெயர் இது தான? துணிவு கதையுடன் தொடர்பா?

தல 62 படத்தின் பெயர் இது தான? துணிவு கதையுடன் தொடர்பா?

- Advertisement -

தல 62 படத்திற்கான பூஜைகள் ஏற்கனவே நடைபெற்று இருப்பதாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. எனினும் அதில் நடிகர் அஜித் வழக்கம்போல் பங்கேற்கவில்லை. தற்போது அஜித் ஐரோப்பாவில் சுற்றுலா மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அவர் திரும்பியவுடன் நடிகர் அஜித்தை வைத்து ஒரு வீடியோ சூட் செய்யப்பட உள்ளது. அதில் படத்தின் பெயர் மற்றும் யார் யார் இதில் பணியாற்றுகிறார்கள் என்ற தகவல்கள் வெளியிடப்பட உள்ளன.

இந்த நிலையில் நடிகர் அஜித்தின் புதிய திரைப்படத்திற்கு வி, வ, என்ற தலைப்பில் பெயரிடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த இந்தப் படத்திற்கு யாருமே யோசிக்காத ஒரு பெயரை இயக்குனர் மகிழ் திருமேனி வைத்துள்ளார். பொதுவாக நடிகர் அஜித்துக்கு வில்லன் கலந்த கதாபாத்திரம் தான் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்படுகிறது. அதனை மையமாக வைத்து தான் கதை எழுதப்பட்டுள்ளது .

- Advertisement -

இதனால் ஏ கே 62 படத்திற்கு டெவில் என்று பெயரிடப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே துணிவு படத்தில் நடிகர் அஜித் டார்க் டெவில் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் அதன் ஸ்பின் ஆஃப் கதையாக இது இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடிகர் அஜித்துக்கு ஐந்தாவது முறையாக இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார். மேலும் படத்தின் ஒளிப்பதிவாளராக தொடர்ந்து நான்காவது முறை நீரவ் சா பணியாற்ற உள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் அஜித் சென்னை வரவில்லை என்றால் அவர் இல்லாமலே வெறும் மோஷன் போஸ்டரை வைத்து படத்தின் பெயரை வெளியிட படக் குழு முடிவெடுத்துள்ளது. முதலில் ஏகே 62 தீபாவளிக்கு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது .ஆனால் நடிகர் அஜித் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் படம் அடுத்த ஆண்டு தான் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. டெவில் என்ற இந்த தலைப்பு உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்பதை கமெண்டில் கீழே சொல்உள்ளன.

Most Popular