Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாதல 62 படத்தின் அதிகாரிகள் அறிவிப்பு எப்போது? வெளியான தகவல்

தல 62 படத்தின் அதிகாரிகள் அறிவிப்பு எப்போது? வெளியான தகவல்

- Advertisement -

தல 62 திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுகளாகியும் அந்தப் படத்திற்கான எந்த அறிவிப்பும் அதன் பிறகு வெளியாகவில்லை. இயக்குனர் விக்னேஷ் சிவன் படத்தை விட்டு வெளியேறிய நிலையில் அனிருத்தும் விலகி விட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் தல 62 படத்தின் பூஜை தொடங்கி விட்டதாக புகைப்படங்கள் வெளியாகின. எனினும் அது குறித்தும் அதிகாரப் அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் அஜித் தற்போது பைக்கில் சுற்றுலா சென்று வருகிறார். இதனால் அவரும் எப்போது திரைப்பட தளத்திற்கு திரும்புவார் என்று தெரியவில்லை. மகிழ்திருமேனி தான் இந்த படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் வந்தாலும் அது தொடர்பாகவும் எந்த அதிகாரப்பூர் அறிவிப்பும் வெளியாகவில்லை.

- Advertisement -

இதனால் அஜித் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். மற்ற நடிகர்கள் படம் எல்லாம் அப்டேட்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் எந்த அறிவிப்பும் இதுவரை தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளியாகவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் தல 62 திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தான் ரிலீஸ் ஆகும் என்பதால்,அதற்கான நேரம் இன்னும் அதிகமாக இருக்கிறது. இதனால் நடிகர் அஜித் தனது பைக் சுற்றுப்பயணத்தை  விட்டு சென்னை திரும்பியவுடன் அவருக்கு கதையை சொல்லி மகிழ்த்திருமேனி உறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தல 62 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. தற்போது அஜித் சினிமாவில் இருந்து கொஞ்சம் கவனத்தை திருப்பி மற்ற துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் .

இதனால் சினிமாவுக்கு சின்ன பிரேக் எடுத்திருக்கிறார். தல 62 திரைப்படத்தை முடித்துவிட்டு நடிகர் அஜித் மீண்டும் உலக சுற்றுலா செல்ல உள்ளார். அதன் பிறகு அடுத்த படத்தை அவர் தொடங்க உள்ளார். இதனால் நடிகர் அஜித் இனி சினிமாவில் அவ்வப்போது தான் நடிப்பார் என்று கூறப்படுகிறது இது அஜித் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

Most Popular