சினிமா

மகிழ் திருமேனியும் இல்லையாம்? ஏகே 62 படத்தை இயக்க அரண்மனை இயக்குனருடன் லைகா பேச்சுவார்த்தை

துணிவு திரைப்படத்தை அடுத்து தல அஜித் ஏகே 62 என்று திரைப்படத்தை நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகின்றது. அதேபோல் நாளுக்கு நாள் இந்த திரைப்படத்தைப் பற்றிய அப்டேட்ஸ்களும் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அது எதுவும் நிலையான அப்டேட்ஸ்களாக இருப்பது இல்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாற்றத்தோடு வெளி வருகிறது.

Advertisement

முன்பு முதன் முதலில் இந்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருப்பதாக தகவல் வெளிவந்தது. விக்னேஷ் சிவன் கதை தல அஜித்திற்கு திருப்தி அளிக்காததால் அதை அவர் நிராகரித்து விட்டார் என்ற செய்தியும் வெளியானது. ஆனால் நேற்றைய அறிவிப்பின்படி ஏகே 62 திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்கம் இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இவற்றைத் தொடர்ந்து இனி ஏகே 62க்கான படப்பிடிப்பு செய்தி ஏதாவது வெளியாகும் என்று எதிர்பார்த்தால் மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவலை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கிறார்கள்.

ஏகே 62 திரைப்படத்திற்கான கதையை இன்னும் முழுமையாக எழுதவில்லை. அதை எழுத எனக்கு இரண்டு மாத காலம் வேண்டுமென்று லைக்கா தயாரிப்பு நிறுவனத்திடம் கோரிக்கை வைத்திருந்தார். இயக்குனர் மகில் திருமேனி ஆனால் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள லைக்கா நிறுவனம் தயாராக இல்லை. ஏனெனில் அவர்கள் ஏகே 62 திரைப்படத்தை உடனடியாக எடுப்பதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள்.

Advertisement

அதற்கு அவர்கள் இரண்டு மாத கால அக வாசம் கொடுக்க சற்று தயக்கம் கொள்கிறார்கள். இதன் காரணமாக லைக்கா தயாரிப்பை நிறுவனம் தற்பொழுது ஏகே 62 திரைப்படத்தை இயக்குவதற்கு வேறு ஒரு இயக்குனரை தேர்வு  செய்திருக்கிறார்கள்.

இயக்குனர் சுந்தர் சி இடம் லைக்கா தயாரிப்பு நிறுவனம் ஏகே 62 திரைப்படத்தை இயக்குமாறு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இயக்குனர் சுந்தர் சி இதற்கு ஒப்புக்கொண்டாரா இல்லையா என்பதை பற்றி எந்த தகவலும் தற்பொழுது வெளிவரவில்லை.

மேலும் ஏற்கனவே இயக்குனர் சுந்தர் சி 55 கோடி ரூபாய் செலவில் அரண்மனை திரைப்படத்தின் உடைய நான்காம் பாகத்தை நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த ஏகே 62 என்ற திரைப்படத்தை இயக்குவதற்கு சுந்தர்சியின் பதில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் படக்குழுவினர்கள் காத்திருக்கிறார்கள். மேலும்  ஏகே 62 திரைப்படத்தின் உடைய அப்டேட்ஸ்களை படக்குழுவினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top