Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாதல ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்..புதிய தோற்றத்தில் அஜித்குமார்

தல ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்..புதிய தோற்றத்தில் அஜித்குமார்

நடிகர் அஜித் குமாருக்கு சினிமா மீது ஆர்வம் போய்விட்டது என்றும் தற்போது பைக்கில் தான் அதிக நேரம் அவர் வலம் வருகிறார் என்றும் நீங்கள் நினைத்தீர்கள் என்றால் அது தவறு ஏனென்றால் அஜித் சினிமாவை தனது தொழிலாக செய்கிறார்.

- Advertisement -

அதற்கு இடையில் தமக்கு பிடித்த விஷயத்தையும் மேற்கொள்கிறார் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு அஜித் நல்ல எடுத்துக்காட்டு. நாமெல்லாம் வேலை வேலை என்று நமக்கு பிடித்த விஷயத்தை செய்யாமலே போய்விடுவோம்.

- Advertisement -

அவ்வளவு ஏன் மே மாதம் கோடை விடுமுறையில் நம்மால் ஒரு ஊட்டி கொடைக்கானல் கூட போக முடியாது. அதற்கு காரணம் பொருளாதார சுதந்திரம் நமக்கு இல்லாததுதான். ஆனால் அஜித் படங்களில் நடிப்பதன் மூலம் பொருளாதார சுதந்திரத்தை அடைந்து விடுகிறார்.

- Advertisement -
Ajithkumar helping woman at london heathrow airport

அதன் பிறகு தம் மனதில் இருக்கும் ஆசைகளை எல்லாம் ஒன்னு ஒன்றாக செய்து வருகிறார். துப்பாக்கி சுடுவது, போட்டோகிராப், பிரியாணி,பைக், தற்போது ஏகே மோட்டோ நிறுவனம் என அஜித் பிசியாக இருக்கிறார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் தனது தொழில் பக்கம் திரும்பி உள்ள அஜித் விடாமுயற்சி திரைப்படத்திற்காக தயாராகி வருகிறாராம். இந்தப் படத்திற்கு ஏற்ப தனது கெட்டப்பை அஜித் மாற்றி உள்ளார்.

எப்படி துணிவு திரைப்படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் அஜித் நடித்த அதேபோல் ஒரு லுக்கை நாம் பார்க்கலாம். இது தொடர்பாக படத்து ஒரு வீடியோவை விரைவில் வெளியிட உள்ளது.

அதில் அஜித் தனது ரசிகர்களை திருப்தி படுத்துவதற்காக எவ்வாறு மெனக்கிருக்கிறார் என்பதை நாம் பார்க்கப் போகிறோம்.இதன் மூலம் அஜித்துக்கு சினிமா மீது ஆர்வம் குறைந்து விட்டது என்ற பேச்சை ரசிகர்கள் நிறுத்திக் கொள்ளலாம். முடிந்தால் அஜித் போல் வாழவும் முயற்சி செய்யலாம்.

Most Popular