Wednesday, April 24, 2024
- Advertisement -
Homeசினிமாரூட்டை மாற்றிய அஜித்..! இயக்குனர்களை விட்டு  தயாரிப்பாளருடன் ஜோடி சேரும் தல

ரூட்டை மாற்றிய அஜித்..! இயக்குனர்களை விட்டு  தயாரிப்பாளருடன் ஜோடி சேரும் தல

- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் ,தல போன்ற பெயர்களை அழைக்காதீர்கள் , ஏகே  என்று மட்டும் அழையுங்கள் என்று கூறிய நடிகர் அஜித் தற்போது புதிய ரூட் ஒன்றை பிடித்துள்ளார். நடிகர் அஜித்தின் பார்வை ராசியில் உள்ள குரு பார்வை போன்றது. அவருடைய பார்வை நம் மீது விழுந்தால் சீக்கிரம் போகாது என்று பொருள்படும் வகையில் இயக்குனர் வினோத் கூறியிருந்தார். அதற்கு காரணம் நடிகர் அஜித்துக்கு ஒரு இயக்குனரை பிடித்து விட்டால் தொடர்ந்து அவருடன் கூட்டணி அமைத்து மூன்று படங்கள் நடித்த பிறகுதான் வேறு இயக்குனர் பக்கம் செல்வார்.

முதலில் சிறுத்தை சிவா உடன் இணைந்து வீரம், வேதாளம், விவேகம் ,விசுவாசம் என தொடர்ந்து படங்களை நடித்தார். அதன் பிறகு சிவாவை விட்டுப் பிரிந்து இயக்குனர் எச் வினோத்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என்று ஹட்ரிக் படங்களில் நடித்தார். அடுத்தது அஜித் எந்த இயக்குனருடன் ஹட்ரிக் அமைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தன்னுடைய ரூட்டை அப்படியே மாற்றிக் கொண்டார்.

- Advertisement -

அதாவது முன்பெல்லாம் இயக்குனருடன் மட்டுமே இணைந்து ஜோடி சேர்ந்த அஜித் தற்போது தயாரிப்பு நிறுவனங்களுடன் ஜோடி சேர தொடங்கி விட்டார். முதலில் சத்திய ஜோதியுடன் விவேகம், விசுவாசம் என இரண்டு படங்களை கொடுத்த அஜித் அதன் பிறகு ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூருடன் இணைந்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என ஹாட்ரிக் படங்களை கொடுத்தார். இதில் துணிவு திரைப்படத்தை வெளிநாட்டு உரிமைகளை லைக்கா நிறுவனம் கைப்பற்றி விளம்பரப்படுத்தியது .

- Advertisement -

இதன் மூலம் நடிகர் அஜித்தின் வெளிநாட்டு மார்க்கெட் கடும் உயர்வை சந்தித்தது. துணிவு திரைப்படம் இதுவரை வெளிநாடுகளில் அதிக வசூலை பெற்ற திரைப்படம் என்ற பெருமையை அஜித்திற்கு பெற்று தந்தது. இதனால் கடுமையாக இம்ப்ரஸ் ஆன அஜித் தற்போது லைக்காவுடன் ஹாட்ரிக் போட உள்ளார். ஏகே 62 திரைப்படத்தையும் ஏகே 63 மற்றும் ஏகே 64 என தொடர்ந்து மூன்று படங்களையும் லைகாவுக்கே செய்து தர அஜித் ஒப்புக்கொண்டு உள்ளார். இதற்காக ஹாலிவுட் திரைப்படங்களைப் போல் அஜித்துக்கு பெருந்தொகை கொடுத்து லைக்கா நிறுவனம் ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Most Popular