சினிமா

சென்னை வந்தார் அஜித்.. விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

Ajith in airport

நடிகர் அஜித் தற்போது இயக்குனர் ஹச். வினோத்துடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். வலிமை திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெறாத நிலையில் ,அடுத்த படத்தை சிறப்பாக கொடுக்க வேண்டும் என அஜித், வினோத் கூட்டணி தீயாக வேலை செய்து கொண்டிருந்தது. ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த அஜித் திடீரென தனது குடும்பத்தினருடன் ஐரோப்பிய கண்டத்திற்கு சுற்றுலா சென்றார்.

அங்கு நடிகர் அஜித் தனக்கு பிடித்த பைக் ரைடில் நெடு தூரம் சென்றார். இதன் பிறகு இங்கிலாந்துக்கு சென்ற அஜித் அங்குள்ள கடையில் பொருட்களை வாங்கிய சிசிடிவி காட்சி வைரலானது .இதனைத் தொடர்ந்து தனது குடும்பத்தினருடன் நடிகர் அஜித் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ்க்கு சென்றார் அங்கு ஈபில் கோபுரம் முன்பு நடிகர் அஜித் நிற்க ரசிகர்கள் அவரை சூழ்ந்து ரசிகர்கள் புகைப்படத்தை எடுத்துக் கொண்டனர்.

இந்த நிலையில் நடிகர் அஜித் இன்று சென்னை திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் அஜித்தை கண்ட விமான நிலைய ஊழியர்கள், ரசிகர்கள் பரவசமடைந்து அவரிடம் புகைப்படம் எடுக்க முயன்றனர். ஆனால் பாதுகாவலர்கள் அஜித்தை பத்திரமாக அழைத்துச் சென்று காரில் அனுப்பி வைத்தனர். அஜித் தனது படப்பிடிப்பு பணியை மீண்டும் தொடங்க உள்ளார். இதில் அஜித் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்தப் படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், வீரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் முதலில் தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது தற்போது அஜித் சுற்றுலா சென்று திரும்பியதால் படத்தின் படப்பிடிப்பு தள்ளப்பட்டு உள்ளது இதனால் கிறிஸ்துமஸ் விடுமுறையை மையமாக வைத்து இந்த படத்தை வெளியிட தயாரிப்பாளர் போனி கபூர் முடிவெடுத்துள்ளார் அது தாண்டி போனால் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்துடன் அஜித் படம் மோத வாய்ப்பு உள்ளது

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

TOP STORIES

To Top