Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாவிடாமுயற்சி திரைப்படம் வெளிவருமா ..?வராதா..? தல ரசிகர்கள் ஆவேசம்..!

விடாமுயற்சி திரைப்படம் வெளிவருமா ..?வராதா..? தல ரசிகர்கள் ஆவேசம்..!

தமிழ் சினிமாவில் எந்த பெரிய நடிகருடைய திரைப்படமும் தற்பொழுது வெளிவராமல் இருக்கிறது .வெளிவந்த திரைப்படங்களில் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய அளவில் வெற்றி பெறவில்லை .இந்நிலையில் பல ரசிகர்கள் தமிழ் சினிமாவை வறண்டு போக்கியிருக்கிறது .தியேட்டருக்கு செல்லலாம் என்றால் பார்ப்பதற்கு நல்ல படம் இல்லை இன்று குறை கூறி வந்திருந்தார்கள்.

- Advertisement -

இதன் காரணத்தினால் தியேட்டர் ஓனர்கள் ஏற்கனவே வெளிவந்த பழைய திரைப்படங்களை ரசிகர்கள் அதிகம் கொண்டாடிய திரைப்படங்களாக தேர்வு செய்து மீண்டும் அதை திரையரங்குகளில் வெளியிட்டு குறைந்த விலைக்கு டிக்கெட்கள் கொடுத்து வருகிறார்கள்.

இதனால் ரசிகர்களும் வேறு வலியின்றி அதை திரைப்படத்திற்கு வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இப்பொழுது வெளியிடப்படும் பழைய திரைப்படங்கள் முதன் முதலில் தியேட்டரில் வெளியிட்டபோது பார்க்க முடியாமல் போனவர்களும் மீண்டும் அதை பார்க்க வேண்டும் என்ற ஆசை பட்டவர்களுக்கும் இது ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது. தியேட்டரை நோக்கி இவர்கள் வருவதற்கு இது ஒரு காரணமாக இருக்கிறது.

- Advertisement -

அந்த வகையில் கடந்த வாரம் தல அஜித் நடித்த வாலி மற்றும் பில்லா திரைப்படம் தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. அதை பார்க்க வந்த அஜித்தின் ரசிகர்கள் விடாமுயற்சி திரைப்படம் என்னாச்சு என்று கொந்தளித்து விட்டார்கள். ஏறத்தாழ ஒரு வருடம் ஆகப் போகிறது விடாமுயற்சி திரைப்படம் எடுக்கப் போவதாக கூறி. லைக்கா நிறுவனம் என்ன செய்கிறது. திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் கூட இதுவரை வெளிவரவில்லையே என்று புலம்பி தள்ளி விட்டார்கள்.

- Advertisement -

அசர் பைஜானில் இந்த திரைப்படத்தை இயக்குவதாக கூறிய படக்குழுவினர்கள் அசர் பைஜானின் வானிலை மாற்றத்தால் சென்னை திரும்பி விட்டதாகவும், இதனால் படப்பிடிப்பு தற்பொழுது நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. இப்படியே தடைப்பட்டு கொண்டே போனால் இத்திரைப்படத்தை எப்பொழுது திரையரங்கில் காண்பது என்று தல ரசிகர்கள் ஆவேசம் அடைந்து விட்டார்கள். இன்னும் சில வாரங்களில் மீண்டும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று லைக்கா கூறி இருக்கிறது.

தல ரசிகர்கள் என்றும் தல அஜித்தை விட்டுக் கொடுப்பவர்கள் அல்ல .அதனால் தான் என்றோ வெளிவந்த வாலி, பில்லா போன்ற திரைப்படங்களுக்கு கூட ஓடி வருகிறார்கள். அவர்களுக்காகவாது விரைவில் விடாமுயற்சி திரைப்படத்தை படக்குழுவினர்கள் வெளியிட வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள் .அதே போல் இவ்வளவு ஆர்வத்துடன் இருக்கும் ரசிகர்கள் இத்திரைப்படம் வெளி வந்தால் நிச்சயம் வெற்றி பெற வைத்து விடுவார்கள் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Most Popular