இயக்குனர் நெல்சன் தலைமையில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் உலகெங்கும் அதிரடியாக வசூல் செய்து வருகிறது. பல்வேறு சாதனைகளை ஏற்கனவே முறியடித்து விட்டது. கேரளா & கர்நாடகாவில் அதிக வசூல் செய்த தமிழ் படமாக ஜெயிலர் முன்னேறியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் ரஜினி – மோகன்லால் – சிவராஜ் குமார் கூட்டணி தான்.
இந்த பிரம்மாண்ட வெற்றியுடன் தன் மகளின் இயக்கத்தில் அடுத்தப் படமான லால் சலாமையும் நிறைவு செய்துள்ளார். போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இப்படம் உள்ளது. இதில் ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் மட்டுமே காணப்படுவார்.
நாயகனாக அடுத்ததாக லைகா நிறுவனம் தயாரிப்பில் ஜெய் பீம் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து மீண்டும் இதில் போலீஸாக நடிக்கிறார். மேலும் பல வருடங்களுக்குப் பின்னர் இதில் ரஜினிகாந்த் முஸ்லிமாக வருகிறார் என தகவல்கள் வந்துள்ளன.
ரஜினிக்கு நிகரான ஒரு நடிகர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தால் தான் படத்தில் இன்னும் அனல் பறக்கும். தலைவர் 170 படத்திற்காக அத்தகு வில்லனைத் தான் படக்குழு ஒப்பந்தம் செய்யவுள்ளது. அவர் வேறுயாரும் இல்லை மலையாள தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான மற்றும் விக்ரம் படத்தில் அதிரடி காட்டி முன்னிலை கதாபாத்திரம் ஒன்றில் வந்த பகத் பாசில் தான்.
பகத் பாசில் தமிழில் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறினார். மாமன்னன் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தார். அவரின் நடிப்பில் பிழை கண்டுபிடிக்க இயலுமா ? அவ்வளவு தத்ரூபமாக நடிப்பார். கமலுடன் நடித்த பின் தற்போது சூப்பர்ஸ்டாருடன் இணைகிறார்.
இது பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. ரஜினி – பகத் பாசில் சிறப்பான மோதலாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. விரைவில் இது அதிகாரபூர்வமான அறிவிப்பாக வெளியாகும். காத்திருங்கள்.