Saturday, November 9, 2024
- Advertisement -
Homeசினிமாவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சன் பிக்சர்ஸ்.. ரஜினியின் 171 படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சன் பிக்சர்ஸ்.. ரஜினியின் 171 படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் 171 வது திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. கோலிவுட் வட்டாரத்தில் நேற்று ஒரு மிகப்பெரிய புரளி வெடித்தது.

- Advertisement -

அதில் நடிகர் ரஜினியிடம் லியோ படத்தின் ஒரு முக்கிய காட்சியை லோகேஷ் கனகராஜ் பகிர்ந்து கொண்டதாகவும், அதனை ரஜினி நெல்சனிடம் கூறி இன்டெர்வல் காட்சியாக அதை வைத்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இதன் காரணமாக கடுப்பான லோகேஷ் கனகராஜ் தலைவர் 191 திரைப்படத்திலிருந்து வெளியேறுவதாக முடிவு எடுத்து விட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இது வதந்தியாக இருக்கும் என்று நமது தளத்தில் ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தோம்.

- Advertisement -

தற்போது நேற்று வெளியான விமர்சனங்களுக்கு பதிலடி தரும் விதமாக லோகேஷ் கனகராஜ் தலைவர் 171 வது படத்தை இயக்குவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

- Advertisement -

விக்ரம் வெற்றிக்கு பிறகு தற்போது லியோ படத்தில் பணியாற்றி வரும் லோகேஷ் கனகராஜ், அதுக்கு பிறகு ரஜினிக்காக கதையை தயார் செய்ய முடியவில்லை. ஏற்கனவே ரஜினி வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைத்தால் இந்தக் கதைகளத்தை பயன்படுத்தி வீர்கள் என லோகேஷ் இடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் தளபதி படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.தளபதி படத்தை தான் நான் எடுத்தால் அந்தக் கதை களத்தோடு ஒப்பிட்டு எடுப்பேன் என்று கூறி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தார். ரஜினி தற்போது தனது 170 வது திரைப்படம் ஆன ஜெய் பீம் இயக்குனருடன் பணியாற்ற  உள்ளார்.

இதன் சூட்டிங் சுமார் ஒரு மாதத்தில் இருந்து இரண்டு மாதம் வரை நடைபெறும் என்று தெரிகிறது. இதனால் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தலைவர் 171 திரைப்படத்திற்கான பணிகளை லோகேஷ் கனகராஜ் தொடங்கி விடுவார்.லியோவுக்கு பிறகு ரஜினிக்கான கதையை அமைப்பதில் லோகேஷ் கனகராஜ் பிஸி ஆகிவிடுவார் என தெரிகிறது.

Most Popular