Friday, April 19, 2024
- Advertisement -
Homeசினிமாதலைவர் 171 படத்தின் புதிய அப்டேட்.. சூர்யாவின் இயக்குனருடன் கைகோர்க்கும் ரஜினி

தலைவர் 171 படத்தின் புதிய அப்டேட்.. சூர்யாவின் இயக்குனருடன் கைகோர்க்கும் ரஜினி

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 169 திரைப்படமான ஜெய்லரில் நடித்த வருகிறார். இயக்குனர் நெல்சன் உடன் கை கோர்த்துள்ள ரஜினி படு மாசான ஒரு படத்தை கொடுக்க வேண்டிய உத்வேகத்துடன் நடித்து வருகிறார். இந்த படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து தலைவர் 120வது திரைப்படத்திற்கு லால் சலாம் என பெயரிடப்பட்டுள்ளது. இதில் நடிகர் ரஜினிகாந்த் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இதனை அடுத்து ரஜினிகாந்தின் 171 வது படத்தை யார் இயக்குகிறார் என்று கடும் போட்டி இருந்தது. டான் திரைப்படத்தை இயக்கிய சிபி சக்கரவத்திற்கும், லவ் டுடே, கோமாளி படங்களை இயக்கிய பிரதிப் ரங்கநாதனுக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. இதில் சிபி சக்கரவர்த்தியின் கதையை நடிகர் ரஜினி நிராகரித்த நிலையில், பிரதிப் ரங்கநாதன் படத்தின் கதையை ஓகே சொன்னதாக முதலில் கூறப்பட்டது.

- Advertisement -

இதற்காக படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ் கரனிடம் கதை சொல்ல லண்டன் வரை பிரதீப் ரங்கநாதன் சென்றிருந்தார். ஆனால் அந்த படம் ஒப்புக்கொள்ளப்படவில்லை. இதனை அடுத்து சூர்யாவை வைத்து ஜெய்பீம் என்ற படத்தை கொடுத்த ஞானவேலுடன் ரஜினி தனது 171 வது படத்தை இணைய உள்ளார் என்ற தகவல் உறுதியாகி உள்ளது. ஜெய் பீம் போன்று சமூகப் பிரச்சனை கதையை பேசும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கிறார்.

- Advertisement -

இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். லைக்கா இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கபாலி, காலா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சமூகம் சார்ந்த பிரச்சனையை மையமாக வைத்து ரஜினி களமிறங்குவதால் தற்போது அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

Most Popular