இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடப்பு சினிமாவில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளார். அவரின் படம் என்றால் எதிர்பார்ப்பு முந்தைய படத்தை விட அதிகரித்துக் கொண்டே போகிறது. விஜய்யுடன் அவர் இரண்டாவது முறையாக செய்த படம் லியோ, உலகளவில் 600 கோடிகளை வசூலித்தது பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளது.
அடுத்ததாக லோகேஷ் தலைவர் ரஜினிகாந்த்துடன் அவரின் 171வது படத்தை இயக்குகிறார். கைதி, விக்ரம், லியோ என தன் யுனிவர்சில் மூன்று படங்களை இணைத்துள்ளார். அடுத்ததாக அவர் செய்யும் தலைவர் 171 இதில் வராது என ஏற்கனவே அறிவித்துவிட்டார். அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தின் கதை 6 ஆண்டுகள் முன்பு எழுதியது எனும் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினி அண்மையில் லால் சலாம் படத்தின் டப்பிங் பணிகளை முடித்துவிட்டு ஞானவேல் ராஜாவுடன் தன் 170வது படத்தில் நடித்து வருகின்றார். தலைவர் 171 துவங்க எப்படியும் ஏப்ரல் ஆகிவிடும். தொடர்ந்து மூன்றாவது முறையாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினியின் படத்தை தயாரிக்கிறது.
இந்தப் படத்தில் நடிப்பவர்களும் பட்டியல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது. தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ள சூடான செய்தி என்னவென்றால், படத்தில் ரஜினிகாந்தின் வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்கப் போகிறாராம்.
காஞ்சனா சீரிசில் பிஸியாக இருந்த ராகவா லாரன்ஸ் அடுத்தடுத்து பெரிய படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். முதலில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஜிகர்தண்டா டபிள் எக்ஸ் படத்தில் வில்லனாக அறிமுகமாகி அதிர்ச்சியை உண்டாக்கினார். மக்கால் ஆகிய நாம் இவரை இதற்கு முன் வில்லனாக பார்க்காமல் முழுமையாக காமெடி பேய் படங்களில் பார்ப்பதால் ஆச்சரியமாக பார்க்கிறோம்.
ஆனால் இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் இவரிடம் வில்லத்தனம் இருப்பதை உணர்கின்றனர். மேலும், ஜிகர்தண்டா முதல் பாகத்திலயே அசால்ட் சேது கதாபாத்திரத்தில் இவர் தான் நடிக்கவிருந்தார் ஆனால் இறுதியில் அது நடக்காமல் தற்போது இரண்டாம் பாகத்திற்கு வந்துள்ளார். அதனால் ராகவா லாரன்ஸிடம் தரமான நடிப்பை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
ரஜின்காந்த்க்கு எதிராக நடிக்கும் வலுவான நடிப்பற்றலை வெளிப்படுத்தி மக்கள்களின் கைத்தட்டல்களை விரைவில் பெறுவார். அதனுடன் லோகேஷ் கனகராஜ் படமென்பதால் கண்டிப்பாக நடிப்பவரின் சிறந்த ஆற்றலை முழுமையாக ஸ்க்ரீனில் கொண்டுவந்துவிடுவார்.