சினிமா

அடப்பாவிங்களா! விமான நிலைய பயணிகள் பட்டியல் வைத்து தளபதி 67 கேஸ்டை கண்டுபிடித்த படக்குழு

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 67 திரைப்படத்தை பற்றிய ஒரு அப்டேட் இணையதளங்களை பரவி வருகிறது. இது தளபதி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்திருக்கிறது. நடிகர்கள் எங்கு சென்றாலும் அவர்களின் மீது ரசிகர்கள் பார்வை இருந்து கொண்டே இருக்கிறது என்பதற்கு இது மிகப்பெரிய எடுத்துக்காட்டாகும்.

Advertisement

ரசிகர்களிடமிருந்து அவர்கள் எங்கும் தப்பிச் செல்ல முடியாது. அதை நிரூபிக்கும் வகையில் ரசிகர்கள் படக்குழுவிற்கே தெரியாமல் அடுத்த படத்தைப் பற்றிய தகவலை வெளியிட்டு இருக்கிறார்கள்.தளபதி 67 திரைப்படத்திற்கான படப்பிடிப்புக்காக சென்னையிலிருந்து காஷ்மீருக்கு ஸ்பைஜிக் என்று சொல்லப்படும் தனி விமானத்தில் பழக்குவதினர் பயணித்திருக்கிறார்கள். அப்போது பயனாளிகளின் பட்டியலை கொண்டு யார் யார் அந்த விமானத்தில் பயணிக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு அந்த தகவலை இணையத்தில் ரசிகர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த விமானத்தில் ஏற்கனவே வந்த தகவலின் படி நடிகை திரிஷா பயணித்திருக்கிறார். மேலும் இவர் விமான நிலையத்திற்கு வரும்பொழுது தன் முகம் தெரியாதவாறு முக கவசம் மற்றும் கூலர் அணிந்து வருவது போன்று புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. மேலும் இவருடன் இணைந்து நடிகை பிரியா ஆனந்த், நடிகர் சத்யராஜ் மற்றும் கேமராமேன் மனோஜ் பிரேம ஹம்சா தயாரிப்பாளர் லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பயணித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisement

இந்த திரைப்படத்தின் கதாநாயகனான தளபதி விஜயும் இவர்களோடு பயணத்திருக்கிறார் விமான நிலையத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் நிற்பது போன்ற ஒரு காணொளியும் இணையத்தில் பரவி வருகிறது. இதன் மூலம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்க இருக்கிறது என்று தெரிய வருகிறது. ஆனால் ஒரு சில காட்சிகள் மட்டும் தானா இல்லை முழு படமும் காஷ்மீரில் தான் எடுக்கப் போகிறார்களா என்ற எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை.

இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் இவர்கள் எல்லாம் நடிக்கிறார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தளபதி ரசிகர்கள் இன்னும் தளபதி 67 திரைப்படத்தைப் பற்றிய அப்டேட்ஸ் காக காத்திருக்கிறார்கள். ரசிகர்களின் ஆர்வத்தை அறிந்த  படக்குழுவினர் விரைவில் இந்தத் திரைப்படத்தைப் பற்றிய அப்டேட்களை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top