Friday, March 29, 2024
- Advertisement -
Homeசினிமாதளபதி 67 ல் பகத் பாசில்..? விக்ரம் படத்தில் தொடர்ச்சியா?

தளபதி 67 ல் பகத் பாசில்..? விக்ரம் படத்தில் தொடர்ச்சியா?

- Advertisement -

வாரிசு திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67வது படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே மாஸ்டர் படத்தில் லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் இணைந்த அந்த படம் பெரிய ஹிட் அடித்தது. லோகேஷ் கனகராஜ் , விக்ரம் படத்தை தொடர்ந்து தளபதி 67 பணியாற்றுவதால் எதிர்பார்ப்பு டபுள் மடங்கு எகிறி உள்ளது. மேலும் விக்ரம் திரைப்படம் மூலம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற ஹாலிவுட் யுத்தியை லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தினார்.

அதாவது ஒவ்வொரு படத்திற்கும் தொடர்பு வைத்து அதை ஒரு தனி கதை களமாக கொண்டு செல்லும் யுத்தி. அதில் கைதி, விக்ரம் போன்ற படங்கள் இணைந்து உள்ளது. இந்த நிலையில் இதில் தளபதி விஜய் இணைவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இது குறித்து லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக ஏதும் அறிவிக்கப்படாத நிலையில்,பகத் பாசில் அளித்துள்ள ஒரு இன்டர்வியூ பெரும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

- Advertisement -

அதில் தளபதி 67 படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் லோகேஷ் கனகராஜ் யுனிவர்சில் தளபதி 67 இடம்பெறும் என்பதால், அதில் நான் நடிக்கு வாய்ப்பு இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதனால் பகத் பாஸில் தாம் நடிக்க இருப்பதை மறைமுகமாக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். அப்படி இது விக்ரம் படத்தின் கதை ஓட்டத்தில் தொடர்ச்சியாக இருந்தால் இது எந்த மாதிரியான கதைகளமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

- Advertisement -

ஏற்கனவே இந்த படம் ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் என்ற படத்தில் தலுவலாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் படத்தில் பாரில் வேலை பார்க்கும் ஹீரோ தனது பழைய முகத்தை மறைத்துக் கொண்டு அமைதியாக இருக்கும் போது திடீரென்று தன்னுடைய அதிரடி சுபாகம் வெளிப்படும். அவருடைய பழைய முகம் என்ன என்பது குறித்து பாட்ஷா படத்தை போலவே கதை  அமைந்திருக்கும்.

இதனை விக்ரம் கதையோடு லோகேஸ் கனகராஜ் எப்படி சேர்ப்பார் என்று ரசிகர்களும் எதிர்பார்த்து உள்ளனர்.எனினும் இது குறித்து லோகேஷ் கனகராஜ் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது. தளபதி 67 எல்சியூவில் அமைந்தால் கமல், விஜய், சூர்யா, கார்த்தி என நட்சத்திரங்கள் ஒரே படத்தில் தோன்றவும் வாய்ப்பு இருக்கிறது.

Most Popular