சினிமா

தளபதி 67 ‘ லியோ ’ படத்தின் கதை இதுதான்… ! எல்.சி.யூவில் இணையுமா இல்லையா ?

Thalapathy 67 Leo

இந்திய சினிமாவின் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றான லோகேஷ் – விஜய்யின் தளபதி 67 படத்தின் டைட்டில் மற்றும் புரோமோ இன்று வெளியானது. இந்த வீடியோ காட்சி வருவதற்கு முன்பே படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு, பட உறுப்பினர்கள், பூஜை வீடியோ மற்றும் இரத்தம் தெறிக்க தெறிக்க ஓர் போஸ்டரை வெளியிட்டு விஜய் ரசிகர்களின் உற்சாகத்தை உச்சியிலயே பராமரித்தது படக்குழு.

டைட்டில் புரோமோவில் நடிகர் விஜய் ஒரு பக்கம் சாக்லேட் தயாரிப்பது போலவும் மறுபக்கம் கத்தியை கூராக்கிக் கொண்டிருந்தார். இறுதியாக அக்கத்தியை சாக்லேட்டில் முக்கி “ ப்லடி ஸ்வீட் ” எனக் கூற, படத்தின் டைட்டில் ‘ லியோ ’ என திரையில் எழுந்தது.

Advertisement

தளபதி 67 கதை

படத்தின் ஏகப்பட்ட வில்லன்கள். சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் மிரட்ட உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பே இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஹாலிவுட்டில் டேவிட் க்ரொனன்பர்க் இயக்கத்தில் வெளியான ‘ தி ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் ’ படத்தின் உரிமத்தை பெற்றிருப்பதாகவும் அதையே தளபதி 67 படமாக்கவும் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகின.

தற்போது வந்த புரோமோவை ஒப்பிட்டு பார்த்தால் அது உண்மை எனத் தெரிகிறது. அப்படத்தில் நாயகன் ஹோட்டல் உரிமையாளராக வருகிறார், இங்கு விஜய் சாக்லேட் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தில் கேங்ஸ்டர்கள் பலர் நாயகனைத் தேதி வருவர். அதே போல் புரோமோவிலும் நிறைய கார்கள் விஜய்யின் வீட்டை நோக்கி வருவது போல அமைக்கப்பட்டிருக்கிறது.

Advertisement

தளபதி 67 எல்.சி.யூ ?

என்னதான் தி ஹிஸ்டரி ஆப் வயலன்ஸின் உரிமத்தைப் பெற்றிந்தாலும் லோகேஷ் முழுமையாக அப்படியே எடுக்கப் போவதில்லை. அப்படத்தின் கதையை மையமாக கொண்டு இவர் தனி திரைக்கதையை எழுதியுள்ளார். அதற்கு உதவியாக ரத்னகுமார் மற்றும் ஜில் ஜங் ஜக் பட இயக்குனர் தீரஜ் பணிபுரிந்துள்ளானர்.

எல்.சி.யூவில் வரும் படமாக இருந்தால் டைட்டிலை வெளியிடும் போதே கீழே எல்.சி.யூ எனக் குறிப்பிடுவேன் என லோகேஷ் நேர்காணல் ஒன்றில் முன்னரே தெரிவித்திருந்தார். இன்று அது போல் ஏதும் குறிப்பிடவில்லை என்பதால் தனி படமாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றனர். அதே சமயம் இத்தனை வில்லன்கள் மற்றும் ஓர் பயங்கரமான கேங்ஸ்டர் படத்தை எல்.சி.யூவுடன் கோர்த்தால் திரை தீப்பிடிக்கும். லோகேஷ் அதை செய்ய வாய்ப்புள்ளது, பொறுத்திருந்து பார்ப்போம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top