Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாதளபதி 67 டீசர் எப்படி இருக்கும் தெரியுமா? வெளியான தகவல்

தளபதி 67 டீசர் எப்படி இருக்கும் தெரியுமா? வெளியான தகவல்

- Advertisement -

நடிகர் விஜய் வைத்து புதிய திரைப்படம் ஒன்றை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான டீசர் எப்படி இருக்கும் என்பது குறித்து தற்போது தகவல்கள் கிடைத்திருக்கின்றன. விக்ரம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய காரணமாக இருந்தது, அந்த படத்தின் டீசர் தான். படம் தொடங்கும் முன்பே அந்த படம் எப்படி இருக்கும் என்பதை ரசிகர்களுக்கு தெரிவிக்க லோகேஷ் கனகராஜ் ஒரு காட்சியை படமாக்கி அதனை டீசர் போல் வித்யாசமாக வெளியிடுவார்.

அப்படி விக்ரம் திரைப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ஆரம்பிக்கலங்களா என்ற டீசர் செம ஹிட் ஆனது .இதே போன்று ஒரு டீசரை தளபதி 67 படத்திற்கு லோகேஷ் கனகராஜ் வெளியிட உள்ளார். விக்ரம் படத்தில் எப்படி சாப்பாடு, விருந்து ,துப்பாக்கி என்று இருந்ததோ இந்த படத்தில் வித்தியாசமான ஒன்றை வைத்து லோகேஷ் கனகராஜ் எடுத்துள்ளார்.

- Advertisement -

அதாவது சாக்லேட் வைத்து இந்த காட்சி ஆரம்பமாகிறது. இதனை தொடர்ந்து வழக்கம் போல் துப்பாக்கி அதன் பிறகு சண்டை என ஆரம்பிக்கலங்களா  என்பது போன்ற ஒரு பஞ்ச் டயலாக் உடன் தளபதி 67 டீசர் முடிவடைகிறது.இந்த டீசர் குறித்து லோகேஷ் தயாரிப்பில் மைக்கேல் என்ற படத்தில் நடித்துள்ள சுதீப் கிஷன் தெரிவிக்கையில் டீசர் பயங்கரமா இருக்கும்.. பயங்கரமா இருக்கும் என்று இரண்டு முறை பதிலளித்துள்ளார்.

- Advertisement -

மேலும் தமிழ் சினிமாவின் பெரிய நடிகராக இருக்கும் விஜய், விக்ரம் திரைப்படத்தை கொடுத்து லோகேஷ் கனகராஜ் என இருவரும் இணைந்து தமிழ் சினிமாவையே பெருமைப்படும் அளவுக்கு ஒரு படத்தை எடுக்க இருப்பதாக சுதீப் கிஷன் கூறியுள்ளார். சுதீப்  இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பிப்ரவரி ஒன்றாம் தேதி படத்தின் போஸ்டர்களும் இரண்டாம் தேதி படத்தின் நடிக்கும் நடிகர்களின் பர்ஸ்ட் லுக்களும், மூன்றாம் தேதி படத்தின் டீசரும் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால் எப்படா பிப்ரவரி மூன்றாம் தேதி வரும் என விஜய் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Most Popular