தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் திட்டமிட்டபடி தமிழ் & தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக அமைந்துள்ளது, மேலும் அது எதிர்பார்த்த ஒன்று தான். இந்த படத்தை விட ரசிகர்களுக்கு விஜய்யின் அடுத்த படமான தளபதி 67க்கு தான் எதிர்பார்ப்பு அதிகம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அந்தப் படம் உருவாகிறது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக லோகேஷ் கனகராஜ் எங்கு சென்றாலும் தளபதி 67 அப்டேட் பற்றி மட்டுமே கேட்டு தொல்லை செய்து வந்தனர் ரசிகர்கள். இப்போது அனைத்திற்கும் லோகேஷ் முற்றுப்புள்ளி வைக்க உள்ளார்.
வாரிசு படத்தின் முதல் காட்சியை திரையரங்கில் கண்டப் பின் நியூஸ் சேனல்களிடம் அப்டேட் குறித்து, “ வாரிசு படத்தின் வெளியீட்டிற்கு தான் காத்திருந்தோம். அது வெற்றிகரமான வெளியானதால் இன்னும் 10 நாளுக்குள் நீங்கள் படத்தின் அறிவிப்பை எதிர்பார்க்கலாம். ” என்றார். விக்ரம் படத்திற்கு வெளியீட்டு டீஸர் ஒன்று வெளியிட்டது போல் தளபதி 67 படத்திற்கு ஒரு அறிவிப்பு வீடியோ தயாராகியுள்ளது. அதற்கான ஷூட்டிங்கும் முடிவடைந்துவிட்டது.
தற்போது தளபதி 67 படத்தின் ஷூட்டிங் வேக வேகமா நடைபெற்று வருகிறது. சென்னையில் முதல் பகுதி ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்ததாக 25 நாட்கள் கேஷ்மிரில் படப்பிடிப்பு நடைபெறுவுள்ளது. படத்தில் விஜய்யின் லூக் லாங் ஹேர் கொண்டது எனவும் கூறுகின்றனர். சமீபமாக அவர் வெளியிடும் புகைப்படங்களிலும் நீண்ட முடி தான் உள்ளது.
படத்தில் பெரிய பெரிய நடிகர்களும் இடம் பெற்றுள்ளதால் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்குள் அடங்கியிருக்கிறது. இதுவரை சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் இருவரும் படத்தில் இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் நிவின் பாலியும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, ஆனால் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை. அனைத்தும் இனி போக போக ரசிகர்களுக்கு கிடைக்கும். படக்குழு விரைந்து பணிபுரிந்து வருவதால், ஆயுத பூஜை வெளியீட்டை திட்டமிட்டுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.