Wednesday, April 24, 2024
- Advertisement -
Homeசினிமாரத்தம் தெறிக்க, தெறிக்க போஸ்டர்..ஆனால் விஜய் எங்க? தளபதி 67 நாளை அறிவிப்பு

ரத்தம் தெறிக்க, தெறிக்க போஸ்டர்..ஆனால் விஜய் எங்க? தளபதி 67 நாளை அறிவிப்பு

- Advertisement -

தளபதி 67 திரைப்படத்தின் பெயர் நாளை மாலை 5 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என பட குழு அறிவித்துள்ளது. இதனால் இனி தளபதி 67 எனப் பெயரை பயன்படுத்துவது இன்று கடைசியாக இருக்கலாம். தளபதி 67 படம் ஆக்சன் காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் என படத்தில் பணியாற்ற கூடிய பலரும் தெரிவித்திருந்தார்கள்.

- Advertisement -

இதனை போஸ்டர் மூலம் பட குழு உறுதிப்படுத்தி இருக்கிறது. அதாவது விஜயின் உருவத்தை ரத்தம் தெறிக்க வரையப்பட்டிருக்கிறது. ஏற்கனவே கைது திரைப்படத்தின் போஸ்டரும் இதேபோல் ரத்தத்தால் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டது. அதே பாணியில் இந்த போஸ்டரும் இருப்பதால் படம் பார்ப்பதற்கே அச்சம் முட்ட அளவிற்கு ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்த நிலையில் தளபதி 67 பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரத்தத்தால் வரையப்பட்ட விஜய் தோற்றம் பார்ப்பதற்கு சிறப்பாக இல்லை என்ற கருத்து இருந்துள்ளது. இதில் விஜயின் உருவம் தாடி வைத்து பார்ப்பதற்கு நெருடலாக இருப்பது போல் போஸ்டர் அமைக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் ஹீரோக்களின் தோற்றம் மாசாக இருக்க வேண்டும்.

ஆனால் விஜயின் தோற்றம் போஸ்டரில் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள் .எனினும் இது வரையப்பட்ட ஓவியம் என்பதால் இப்படி தோற்றம் மாறி வந்திருக்கலாம் என கருதுகின்றனர் .இதனிடையே படத்தின் டிரைலர் காட்சிகள் அல்லது டீசர் காட்சிகள் வெளியாவதற்கு முன்பே தளபதி 67 படம் போட்ட காசை தயாரிப்பாளருக்கு மேல் கொடுத்து விட்டது.

படத்தின் தொலைக்காட்சி உரிமம் ,ஓடிடி உரிமம் ,இசை உரிமம் என அனைத்தும் பெருந்தொகைக்கு விற்கப்பட்டு இருக்கிறது. இதனால் தயாரிப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், திரிஷா உள்ளிட்ட பிரபலங்களும் இந்த படத்தில் நடித்திருப்பதால் தளபதி 67 மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Most Popular