தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ்.தாம் எடுத்த நான்கு படங்களும் ஹிட் கொடுத்த இயக்குனர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.கொரோனாவுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் எடுத்த மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் அதிக வசூலை பெற்றுள்ளது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்தில் நடிகர் விஜய் உடன் பணியாற்ற இருக்கிறார்.
இதற்கான கதையை அவர் ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டார்.அதற்கு விஜய்யும் ஒப்புதல் தெரிவித்துவிட்டார். இதனை அடுத்து படத்தின் திரைக்கதைக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். விக்ரம் வெற்றிக்கு பிறகு அவர் ஓய்வு எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கமலஹாசன் அடுத்த வாரத்தில் அடுத்த படத்திற்கான பணியை தொடங்குங்கள் என்று அறிவுரை வழங்கியதின் பேரில் லோகேஷ் கனகராஜ் இந்த முடிவு எடுத்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் மாஸ்டர் வசூலை தாண்டவில்லை. விமர்சன ரீதியாகவும் பொதுமக்களிடையே வரவேற்பை பீஸ்ட் பெறவில்லை. தற்போது குடும்பங்களை கவரும் வகையில் வாரிசு திரைப்படத்தில் இயக்குனர் வம்சியுடன் விஜய் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் விஜயின் அடுத்த படமான தளபதி 67 லோகேஷ் கனகராஜ் தான் இயக்குனர் என்று கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது . இந்த நிலையில் லோகேஷ் கனகராஜின் நண்பரும் இயக்குனருமான இரத்தின குமாரிடம் தளபதி 67 குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த ரத்தின குமார், தளபதி 67 முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படமாக தான் வெளிவரும் என தெரிவித்தார். தமிழ் சினிமாவில் சிறந்த படமாகும் அதிக வசூலை கொடுக்கக்கூடிய திரைப்படமாகவும் தளபதி 67 அமையும் என்று குறிப்பிட்டுள்ள ரத்தினகுமார் மாஸ்டர் திரைப்படம் மூலம் தங்களுக்கும் நடிகர் விஜய்க்கும் நல்ல புரிதல் ஏற்பட்டு விட்டதாகவும் இதனை பயன்படுத்திக் கொண்டு அடுத்த படத்தை தங்கள் பாணியில் ஆக்ரோஷமாகவும் அனல் பறக்கும் சண்டை காட்சிகள் கொண்ட திரைப்படம் ஆகவும் தளபதி 67 இருக்கும் என அவருக்கு கூறியுள்ளார்.
இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மாஸ்டர் திரைப்படமும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பூஜை போட்டு தொடங்கப்பட்டது. இதனால் அந்த சென்டிமெட்டை நம்பி படத்திற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் கொஞ்சம் தள்ளி வைத்துள்ளது.