தமிழ் திரையுலகின் வசூல் மன்னன் தளபதி விஜய் தான் நடிக்கும் வாரிசு படத்தை அடுத்த மாதம் முடிக்கவுள்ளார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என 4 தரமான படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த லோகேஷ் கனகராஜ் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறார். படக்குழுவிடம் இருந்து அறிவிப்பு வரும் முன்பே இது உறுதியாகிவிட்டது.
இதனால் ரசிகர்கள் அனைவரும் உச்சக்கட்ட இன்பத்தில் மிதக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் இங்கு சென்றாலும் அவரிடம் இதைப் பற்றியே அனைத்து பத்திரிக்கையாளர்களும் ரசிகர்களும் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். வாரிசு படத்தின் ஷூட்டிங் முடிந்த அடுத்த மாதமே தளபதி 67 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவுள்ளது.
தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்ன குமார் இருவரும் தளபதி 67 படத்தின் திரைக்கதை வேலைகளில் தீவிரமாக உள்ளனர். படத்தில் ஆறு வில்லன்கள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே சஞ்சய்தத், அர்ஜுன், பிரிதிவிராஜ், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகிய 4 நட்சத்திர நடிகர்கள் இணைந்துள்ளதாகவும் கூறுகின்றனர். மீதம் 2 வில்லன்களை தேடி வருகின்றனர்.
மாஸ்டர் படத்தில் எப்போதும் இல்லாமல் திரையில் விஜய்யை சற்று வித்தியாசமாக காட்டினார் லோகேஷ் கனகராஜ். இது விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரையும் ரசிக்க வைத்தது. இதனால் அடுத்த படத்தில் ரசிகர்கள் கூடுதலாக எதிர்பார்க்கின்றனர். கைதி படத்தைப் போல தளபதி 67 படத்திலும் எந்த பாட்டும் இல்லாமல் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் ஆக்ஷன் படமாக உருவாக உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. படத்தில் தீம் சாங் மட்டுமே இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.
கைதி படத்தோடு சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட விக்ரம் படத்தை இணைத்து லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யூனிவர்ஸை உருவாக்கியுள்ளார். தளபதி 67 படம் 100 சதவீதம் லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கும் என்று அவர் ஏற்கனவே தெரிவித்துவிட்டார். ரசிகர்கள் அனைவரும் இந்த படம் லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் சேர வேண்டும் என்று ஏங்குகின்றனர். அதில் இணையுமா இணையாதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.