Sunday, May 19, 2024
- Advertisement -
Homeசினிமாதளபதி 68 - வெங்கட் பிரபு படத்திற்கு பெயர் இது தானா? எகிறிய எதிர்பார்ப்பு

தளபதி 68 – வெங்கட் பிரபு படத்திற்கு பெயர் இது தானா? எகிறிய எதிர்பார்ப்பு

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆன விஜய் வைத்து படத்தை இயக்க இருக்குகிறார். இதற்கான கதையை அவர் ஏற்கனவே தயார் செய்த நிலையில் அதனை மெருகேற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

வெங்கட் பிரபு படத்தின் பெயர் எப்போதுமே வித்தியாசமாக இருக்கும் பிரியாணி, மங்காத்தா, மாநாடு, சென்னை 28, மாஸ், கஸ்டடி என தலைப்பு வித்தியாசமாக இருக்கும். மேலும் அனைவரும் ஏ ஃபிலிம் பை என்று போடும் நிலையில் வெங்கட் பிரபு மட்டும் வெங்கட் பிரபு ஹாலிடே, வெங்கட் பிரபு பெஸ்டிவல், வெங்கட் பிரபு பார்ட்டி என்று வித்தியாசமாக தலைப்பை வைப்பார்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் விஜய் படத்திற்கு வெங்கட் பிரபு ஒரு பிரபல பெயரை டைட்டிலாக வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதை கேட்ட உடனே ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். நிச்சயமாக அது பேன் இந்தியா அளவில் ரசிகர்களை ஈர்க்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

- Advertisement -

அப்படி என்ன தலைப்பு என்று யோசிக்கிறீர்களா? ஆம் அது வேற ஒன்றும் இல்லை.சிஎஸ்கே என்ற தலைப்பை தான் வெங்கட் பிரபு விஜய் படத்திற்கு வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அது கிரிக்கெட் சம்பந்தமான திரைப்படம் ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஒரு சிலர் படம் மாஸாக மங்காத்தா போல் இருக்கும் என்றும் படத்தின் பெயரை நாடு தழுவிய அளவில் பிரபலப்படுத்துவதற்காக வெங்கட் பிரபு சிஎஸ்கே என்ற பெயரை தேர்வு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தலைப்பை வைத்தால் நிச்சயம் படம் மக்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.

ஏற்கனவே சி எஸ் கே அணியின் சிறப்பு விளம்பரத் தூதராக நடிகர் விஜய் செயல் பட்டு இருக்கிறார். இதனால் சிஎஸ்கே என பெயர் வைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

Most Popular