Saturday, September 14, 2024
- Advertisement -
Homeசினிமாதளபதி 68 படம் குறித்து வெங்கட் பிரபு சொன்ன உடன் அசந்து போய்விட்டேன்.. மாபெரும் வெற்றி...

தளபதி 68 படம் குறித்து வெங்கட் பிரபு சொன்ன உடன் அசந்து போய்விட்டேன்.. மாபெரும் வெற்றி பெறும்

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் தற்போது மும்முரமாக தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு நடிகர் விஜய் தற்போது வெளிநாட்டுக்கு சென்று விட்டார். இந்த ஷூட்டிங்கில் சில காட்சிகளை எடுப்பதற்காக தற்போது லியோ பட குழு 10 நாட்கள் காஸ்மீருக்கு சென்று இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் லியோ தொடர்பான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் அக்டோபர் 19ஆம் தேதி திட்டமிட்டபடி இல்லியோ திரைப்படம் வரும் என தயாரிப்பாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் வரை தளபதி 68 திரைப்படத்தில் எந்த அப்டேட்டும் வெளியாகாது என வெங்கட் பிரபு கூறியிருந்தார்.

இந்த நிலையில் வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் அளித்துள்ள பேட்டியில் தளபதி 68 திரைப்படம் குறித்து பேசி இருக்கிறார்.அதில் தளபதி 68  திரைப்படம் குறித்து என்னிடம் இப்போதுதான் பல விஷயங்களை வெங்கட் பிரபு பேசியிருக்கிறார்.

- Advertisement -

அதைக் கேட்டவுடன் நான் அசந்து போய்விட்டேன். கதை நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் இது நிச்சயம் அரசியல் படம் கிடையாது. அனைவரையும் குதூகலப்படுத்தக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படம் ஆக இது இருக்கும்.

- Advertisement -

தளபதி 68 படத்தில் யார் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்று கேட்டால் நீங்கள் நிச்சயம் மகிழ்ச்சி அடைவீர்கள். கேஸ்டிங்கே பிரமாதமாக இருக்கிறது. நடிகர் விஜய்க்கு இந்த கதை மிகவும் பிடித்து விட்டது.உடனே ஓகே சொல்லிவிட்டார்.

லியோ திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகு தான் தளபதி 68 திரைப்படம் குறித்து ஒவ்வொரு அப்டேட்களும் வெளிவரும் என கங்கை அமரன் விளக்கம் அளித்துள்ளார். பாடல்களுக்காக ஸ்பெஷல் இசையை யுவன் சங்கர் ராஜா அமைக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கங்கை அமரனின் இந்த பேட்டி விஜய் ரசிகர்களை குதூகலப்படுத்தி இருக்கிறது.

Most Popular