லியோ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு தளபதி விஜய் தன் 68வது படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு தலைமையில் இத்திரைப்படத்தின் ஷூட்டிங் அக்டோபர் முதல் வாரம் துவங்கப்பட்டது.
இதுவரை படத்தின் பூஜை வீடியோ மட்டுமே வெளியானது. ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் புத்தாண்டை கொண்டாடும் வகையில் இன்று மாலை 6 மணிக்கு வந்துள்ளது. படத்தின் தலைப்பு எதிர்பார்த்தது போலவே ‘ கோட் ’ தான். தி கிரேட்ட்ஸ்ட் ஆப் ஆல் டைம், அதாவது அனைத்து காலங்களிலும் சிறந்தவர் என அர்த்தம்.
ஃபர்ஸ்ட் லுக்கில் அப்பா விஜய் மற்றும் மகன் விஜய் வெற்றியைக் கொண்டாடி நடந்து வருவது போல் அமைக்கப்பட்டுள்ளது. தளபதி விஜய்யை இளமையாகக் காட்ட புது டெக்னாலஜியை பயன்படுத்த ஷூட்டிங்க்கு முன்பே தளபதி விஜய், வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி மூவரும் வெளிநாட்டுக்கு சென்றனர். மேலும் ஃபர்ஸ்ட் லுக்கில், “ ஒளி இருளை விழுங்கலாம் ஆனால் இருள் ஒளியை விழுங்க முடியாது ” என்கிற வசனமும் இடம்பெற்றுள்ளது. ”
#Thalapathy with #IlayaThalapathy is #TheGreatestOfAllTime#Thalapathy68FirstLook#AGS25 #Thalapathy68 @actorvijay Sir@ags_production #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @vp_offl @archanakalpathi @aishkalpathi @venkat_manickam @malinavin @thisisysr… pic.twitter.com/mn7MqP3BN0
— AGS Entertainment (@Ags_production) December 31, 2023
வெளியான ஒரு புகைப்படங்களிலும் விமானத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தளபதி விஜய்யின் ஏர் ஃபோர்ஸ் உடையை அணிந்துள்ளார். படத்தின் தலைப்பைப் போலவே இது வெங்கட் பிரபுவின் என்ன வகைத் திரைப்படம் எனக் கான்பதிலும் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது. கோட் திரைப்படம் ‘ தி வெங்கட் பிரபு ஹீரோ ’ ஆகும்.
இதற்கு முன் தகுந்த வட்டாரங்களில் மற்றும் டிவிட்டரில், இப்படம் டைம் டிராவல் வகையில் உருகாவி வருவதாக கூறினர். அதனால் ஆக்க்ஷன் வகையில் டைம் டிராவல் அமையவும் வாய்ப்புள்ளது, இல்லாமல் கூட போகலாம். படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், மோகன், ஸ்னேஹா, லைலா, மீனாக்ஷி சவுத்ரி, ஜெயராம், அஜ்மல் அமீர், யோகிபாபு என ஓர் பெரிய படையே நடிக்கிறது.
ஸ்காட்லாந்து, சென்னை, ஹைதரபாத் ஷூட்டிங்களை நிறைவு செய்துவிட்டு தற்போது படக்குழு இலங்கை சென்றுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபுவை இலங்கையில் பேட்டை எனும் இடத்தில் கண்ட ரசிகர்கள் அதனை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். அடுத்த சில வாரங்களுக்கு படக்குழு இலங்கையில் ஷூட்டிங் செய்துவிட்டு திரும்பும்.
நேற்று நெல்லையில் வெள்ள பாதிப்பு சிக்கிய மக்களுக்கு நிவார்ணப் பொருட்களை வழங்கிய தளபதி விஜய் புத்தாண்டுக்குப் பிறகு படக்குழுவுடன் இணையவுள்ளார். கிட்டத்தட்ட 50% பணிகளுக்கு மேல் முடிந்துள்ளது. ஏப்ரல் மாதம் உகாதி, ரம்ஜான், தமிழ் புத்தாண்டு, வார விடுமுறை என 4 நாட்கள் விடுமுறை தொடர்ந்து வருவதால் படத்தை அந்த வாரத்தில் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.