Monday, May 20, 2024
- Advertisement -
Homeசினிமாதளபதி 68- அப்டேட் சொன்ன வெங்கட் பிரபு

தளபதி 68- அப்டேட் சொன்ன வெங்கட் பிரபு

தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் ஒன் நடிகராக இருக்கும் நடிகர் விஜய் லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர காத்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் விஜய் தற்போது வெளிநாட்டில் விடுமுறையை கழிக்க சென்று இருக்கிறார். தனது அடுத்த திரைப்படமான தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

மேலும் இந்த படம் தொடர்பான அறிவிப்பும் வெளியானது. ஆனால் அதன் பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இது குறித்து ஏற்கனவே ஒரு பேட்டியில் பேசிய வெங்கட் பிரபு, லியோ திரைப்படம் வெளியான பிறகுதான் தளபதி 62 தொடர்பான அறிவிப்புகள் ஒன்னு ஒன்றாக வரும் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று திடீரென்று வெங்கட் பிரபு ஒரு அறிவிப்பை வெளியிட இருப்பதாக செய்திகள் வெளி வந்தன. இதனால் தளபதி 68 அறிவிப்பாக தான் இருக்கும் என பலரும் எதிர்பார்த்தனர்.இன்னும் சிலர் வெங்கட் பிரபுவின் பார்ட்டி திரைப்படம் கடந்த ஆறு ஆண்டுகளாக திரைக்கு வராமல் இருக்கிறது.

- Advertisement -

இது தொடர்பான அறிவிப்பாக இருக்கலாம் என்றும் சிலர் கூறியிருந்தனர். ஆனால் வெங்கட் பிரபு வேறு ஏதோ ஒரு படத்தின் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பலரும் தாங்கள் தளபதி 62 தொடர்பான அறிவிப்பை தான் வெளியிடப் போகிறீர்கள் என எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால் தற்போது ஏமாற்றமாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கு பதில் அளித்துள்ள வெங்கட் பிரபு தளபதி 68 தொடர்பான அறிவிப்புகள் வரும்போது நிச்சயமாக தெறிக்கும். அதுவரை காத்திருங்கள் என்று கூறியுள்ளார். வெங்கட் பிரபுவின் இந்த பதில் விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. கதை மீது நம்பிக்கை இருப்பதால்தான் வெங்கட் பிரபு இவ்வளவு தைரியமாக பேசுகிறார் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.

Most Popular