Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாகமலுக்கு பிறகு இப்படி ஒரு விசயத்தை செய்த ஒரே நடிகர் விஜய் தான்.. வெங்ட் பிரபுவின்...

கமலுக்கு பிறகு இப்படி ஒரு விசயத்தை செய்த ஒரே நடிகர் விஜய் தான்.. வெங்ட் பிரபுவின் மாஸ் ஏற்பாடு!

நடிகர் விஜய் நடித்து வரும் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீசாக உள்ள லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தளபதி 68 தொடர்பான தகவல்கள் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

நடிகர் விஜய் தற்போது தளபதி 68 திரைப்படத்திற்காக அமெரிக்காவுக்கு சென்று உள்ளார். அமெரிக்காவில் நடிகர் விஜய் முழு உருவத்தின் 3டி கிராபிக்ஸில் ஸ்கேன் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இந்தியன் 2 திரைப்படத்திற்காக நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்குனர் சங்கர் இது போன்ற ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார். அதற்கு பிறகு நடிகர் விஜயை வைத்து வெங்கட் பிரபு இப்படி ஒரு முயற்சியை செய்து இருக்கிறார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது.

- Advertisement -

தளபதி 62 திரைப்படம் எதிர்காலத்தை வைத்து மையமாக இருக்கும் திரைப்படமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் தளபதி 68 திரைப்படத்தில் விஜய் தந்தையாகவும் மகனாகவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.

- Advertisement -

இதனால் இந்த படத்தின் இரண்டு ஹீரோயின்கள் விஜய்யுடன் நடிக்க உள்ளனர். இதில் இரண்டு பேருமே நடிகர் விஜய்க்கு பொருத்தமான 90ஸ் கிட்ஸ் பிடித்த ஹீரோயின்களாகும் ஒன்று விஜய்க்கு எப்போதுமே எவர்கிரீன் ஜோடியாக இருக்கும் நடிகை சிம்ரன் இன்னொன்று குஷி திருமலை போன்ற படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்த ஜோதிகா ஆகும்.

இந்த இரண்டு ஹீரோயின்கள் நடிக்க வைக்க இயக்குனர் வெங்கட் பிரபு அனுப்பியிருக்கிறார் .இதில் சிம்ரன் விஜயுடன் நடிப்பதாக இருந்தால் எப்போது அழைத்தாலும் ஓகே என்று கூறிவிட்டாராம். ஜோதிகா தற்போது கைவசம் எந்த படமும் நடிக்கவில்லை என்றாலும் தற்போது மகளின் படிப்பிற்காக மும்பையில் தங்கி இருக்கிறார்.

இதனால் மகளை விட்டு வந்து நடிக்க கொஞ்சம் யோசிக்கிறார். எனும் இதில் இறுதி முடிவு சூர்யா தான் எடுக்க வேண்டும் என தெரிகிறது. இதனால் ஜோதிகா மற்றும் சிம்ரன் இருவரும் விஜயுடன் இனிய பொழுது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Most Popular