இந்திய சினிமாவில் அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று லியோ. மிகப் பெரிய பட்டாளத்துடன் லோகேஷ் கனகராஜ் ஷூட் செய்துள்ளது இப்படம் போஸ்ட் புரொடக்ஷனில் இருக்கிறது. படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் போன மாதமே நிறைவு பெற்றுவிட்டது. கதாநாயகன் நடிகர் விஜய் இதற்கு இரண்டு வாரங்கள் முன்பே தன் முடித்துவிட்டார்.
தற்போது நார்வேயில் விடுமுறையை கழித்து வருகிறார். அடுத்ததாக ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட் பிரபு & கோவுடன் தளபதி 68 படத்தை துவங்கவிருக்கிறார். இதற்கான முதற்தர பணிகளில் இயக்குனர் வெங்கட் பிரபு ஈடுபட்டுள்ளார். இசையை பொறுத்தவரை இனிமேல் தான் ஆரம்பிக்க வேண்டும் என யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
படத்தில் விஜய்யுடன் நடிக்க மற்ற பிரபலங்கள் குறித்து எந்த வித அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. எப்போதும் போல சமூக வலைத்தளங்களில் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்ற செய்திகள் தான் பரவிக் கொண்டிருக்கிறது. இதில் சில தகுந்த வட்டாரங்களில் கிடைத்த தகவல்கள் உறுதி என நம்பலாம்.
அதாவது இப்படத்தில் நடிகர் விஜய் 2 வேடங்களில் நடிக்க காத்திருக்கிறார். அதனால் ஹீரோயின்களும் 2 பேர். அந்தத் தேடலில் படக்குழு ஈடுபட்டுள்ளது. ம்ருனால் தாக்கூர், நயன்தாரா என வெளியான அனைத்து செய்திகளும் வதந்தி தான். இரண்டு ஹீரோயின்களும் தமிழ் சினிமாவை அடிப்படையாக கொண்டவர்கள் தான்.
இரண்டு வேடங்களில் வரும் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிப்பார் என பலர் கூறியிருக்கிறார்கள். இந்தச் செய்தி 90% உறுதி. விண்டேஜ் விஜய்யின் திருமலை ஜோடி மீண்டும் இணைகிறது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மற்றொரு விஜய்யுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிக்க வாய்ப்பிருக்கிறது. கேப்டன் மில்லர் படத்தின் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி தளபதி 68 படத்திற்கும் ஒப்பந்தம் ஆகவுள்ளார். அவர் தான் இச்செய்தியை உறுதி செய்துள்ளார்.