கோலிவுட் சாம்ராஜ்யத்தில் அமர்ந்து இருக்கும் தளபதி விஜய் அடுத்ததாக 150 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கவுள்ளதாகவும் அவரது படத்தை தயாரிக்க அணுகியிருக்கும் தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல்கள் அண்மையில் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய் ஒவ்வொரு படத்திற்கும் தற்போது 120 கோடி வாங்குகிறார். கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்திற்கும் அவர் இதே தான் வாங்கினார். விஜய்யின் படங்கள் என்றாலே வசூலில் மினிமம் கியாரண்டி. என்னதான் விமர்சனங்கள் அப்படி இப்படி சறுக்கினாலும் பாக்சாபீசில் நிலைத்து நின்று பல்வேறு சாதனைகள் புரியும்.
தற்போது தளபதி விஜய் ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘ தி கோட் ’ படத்தில் நடித்து வருகிறார். சென்னை மற்றும் ஸ்காட்லாந்தில் ஷூட்டிங் முடித்துவிட்டு படக்குழு சமீபத்தில் இலங்கையில் காணப்பட்டது. இந்தப் படத்திற்கு ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர்கள் என அடுத்தடுத்து ரசிகர்களுக்கு அப்டேட் வழங்கியது படக்குழு.
இந்தப் படத்துக்கு பிறகு தளபதி விஜய் இரண்டு ஆண்டுகள் ஓய்வு பெற்று அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அதில் ஒரு சிறிய மாற்றம், அவர் இன்னும் ஒரு படம் செய்ய திட்டமிட்டுள்ளார். யூடியூப் வலைப் பேச்சில் இது குறித்து தகவல்கள் வழங்கியுள்ளனர். அதன் படி தளபதி விஜய் தேர்தலுக்கு முனு இன்னும் ஓர் படத்தில் நடிக்கவுள்ளார்.
அவர்கள் கூறியதாவது, ஆர்.ஆர்.ஆர் படத்தை தயாரித்த தனையா நடிகர் விஜய்யை அடுத்தப் படத்திற்காக அனுகியுள்ளாராம். தளபதி விஜய்யும் அவர்களுக்கு தேதி கொடுக்க முடிவு செய்துள்ளார் என்றனர். அடுத்த தேர்தலில் எந்த வேலையும் இல்லாததால் ஏன் இன்னொரு படம் செய்யக்கூடாது, பெரிய தொகையை வாங்கி வீட்டில் அடிக்கி வைத்தால் கட்சிக்கு பயன்பெறும் என விஜய் யோசித்து அடுத்தப் படத்தில் இறங்குகிறார் என வலைப் பேச்சில் பேசிக் கொண்டனர்.
இன்னும் இந்தப் படத்தை எந்த இயக்குனர் என முடிவு செய்யவில்லை. தளபதி விஜய் புதிய தயாரிப்பாளருடன் இணைய முக்கியக் காரணம் சம்பள உயர்வாக தான் இருக்க வேண்டும் என்றனர். தளபதி 69 படத்திற்கு நிச்சயம் 150 – 200 கோடி வரை வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.