Tuesday, May 7, 2024
- Advertisement -
Homeசினிமா20 வருடங்களுக்கு முன்பே சூப்பர் ஸ்டாரை ஓவர் டேக் செய்தாரா தளபதி! உண்மை என்ன?

20 வருடங்களுக்கு முன்பே சூப்பர் ஸ்டாரை ஓவர் டேக் செய்தாரா தளபதி! உண்மை என்ன?

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முடி சூடா மன்னனாக விளங்கி வருபவர் சூப்பர் ஸ்டார் . இவர் நடித்த படங்கள் எல்லாமே வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனைகளை புரிந்து வரும். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக பாக்ஸ் ஆபீஸில் தரமான வெற்றிகளை கொடுத்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . தற்போது இவர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்தத் திரைப்படத்தில் தமன்னா யோகி பாபு மோகன்லால் உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் . ஏப்ரல் மாதம் வெளியாவதாக இருந்த இந்த திரைப்படம் தற்போது செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

- Advertisement -

சூப்பர் ஸ்டாருக்கு அடுத்தபடியாக அதிகமான ரசிகர்களை கொண்டிருப்பவர் தளபதி விஜய் . சூப்பர் ஸ்டாருக்கு பிறகு தமிழ் சினிமாவில் இவர் தான் என்று சொல்லும் அளவிற்கு மாஸ் ஹீரோவாகவும் பாக்ஸ் ஆபீஸ் கிங் ஆகவும் இருப்பவர் தளபதி . சூப்பர் ஸ்டாரின் மிகப்பெரிய ரசிகர் ஆன இவர் அவரது இடத்தை அடைய வேண்டும் என்பதே இலட்சியமாகக் கொண்டவர் . தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்தத் திரைப்படத்தில் த்ரிஷா அர்ஜுன் மன்சூர் அலிகான் கௌதம் பாஸ்தேவ் மேனன் மற்றும் ஸ்கின் உள்ளிட்ட வரும் நடித்து வருகின்றனர் .

1999 ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சௌந்தர்யா ரம்யா கிருஷ்ணன் நாசர் மணிவண்ணன் ஆகியோரின் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் ஏவிஎம் ப்ரொடக்ஷனில் உருவான திரைப்படம் படையப்பா . இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சினிமா கேரியரில் மிகப் பெரிய வெற்றி படமாக அமைந்தது . இந்தத் திரைப்படம் அந்த காலகட்டத்திலேயே வசூலில் மிகப்பெரிய சாதனைகளை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் தரணியின் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் செய்து கில்லி என்ற பெயரில் எடுக்கப்பட்டது . இந்த திரைப்படத்தில் திரிஷா பிரகாஷ்ராஜ் தாமு லிவர் நடித்திருந்தனர் . 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் தமிழ் சினிமாவிலும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது . விஜயின் கேரியரை பெரிய உயரத்திற்கு கொண்டு சென்று விட்டதில் இந்த படத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது . தமிழ் சினிமாவில் அந்த நேரத்தில் வந்திருந்த திரைப்படங்களில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது கில்லி என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

இந்நிலையில் படையப்பா படத்தின் வசூலை விட கில்லி படத்தின் வசூல் அதிக சாதனை படைத்ததாக தளபதி ரசிகர்கள் கூறி வந்தனர் . ஆனால் சூப்பர் ஸ்டார் படம் தான் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்திருந்தது என சினிமா விமர்சகர்கள் விஜய் ரசிகர்களின் கூற்றை ஏற்க மறுத்தனர் . தற்போது இதனைப் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது . அந்த தகவலின்படி சூப்பர் ஸ்டார் நடித்த படையப்பா திரைப்படம் உலகம் முழுவதும் 64 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது . ஆனால் தளபதி நடித்த கில்லி திரைப்படத்தின் முத்தவசூல் 33 கோடி தான் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது . பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் என்றுமே கிங் சூப்பர் ஸ்டார் தான் என்பது மீண்டும் நிரூபணம் ஆகி இருக்கிறது .

Most Popular