விஜய் – லோகேஷ் கனகராஜ் & கோ இணைந்து தயார் செய்த ஆக்க்ஷன் திரைப்படமான லியோ பாக்ஸ்ஆபிஸில் அதிரடி காட்டிவருகிறது. இதுவரை உலகெங்கும் 600 கோடிகளை அள்ளியுள்ளது. இதனைக் கொண்டாடும் வகையில் நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் படக்குழு பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்தியது.
படத்தின் வெளியீட்டுக்கு முன் திட்டமிட்டிருந்த இசை வெளியீட்டு விழா பாதுகாப்பு முறைகேடு காரணமாக ரத்து செய்யப்பட்டது. என்னதான் படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்தாலுமும் படத்திற்கு முன் விஜய்யின் குட்டி ஸ்டரியயைக் கேட்காதது ஓர் வெற்றிடமாகவே அமைந்தது.
ரசிகர்களின் ஆசைக்கு இணங்க லியோ படத்தின் வெற்றி விழாவைக் கொண்டாடும் நிகழ்ச்சியை ரசிகர்கள் வரவழைத்து பெரிதாத நடத்த திட்டமிட்டு நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. படக்குழுவைச் சேர்ந்த மற்ற நடிகர்கள் மற்றும் கலைஞர்களும் பங்கேற்றனர். அனிருத் ஊரில் இல்லாததால் அவர் கலந்துகொள்ளவில்லை.
நேற்று நிகழ்ச்சியில் வழக்கம் போல அருமையாக பேசினார் விஜய். தன் குட்டி ஸ்டோரியில் காடு குறித்த ஓர் உவனையைக் கூறினார். ஜெயிலர் விழாவில் ரஜினி பேசியதற்கு விஜய்யும் துணை இயக்குனர் ரத்னகுமாரும் சேர்ந்து பதிலடி கொடுத்தனர். அதனுடன் ரசிகர்களை சமூக வலைத்தளத்தில் கோபப்படாமல் அன்பு காட்டும்படி கேட்டுக்கொண்டார்.
விஜய் பேசியதுடன் தொகுப்பாளர்கள் அவரிடம் சில கேள்விகள் கேட்டனர். அதில் அவரிடம் ஆர்.ஜே “ 2026 ” என்பதை மட்டுமே குறிப்பிட ஒட்டுமொத்த ரசிகர் படையும் ஆரவாரத்தில் கத்தியது. விஜய் அதற்கு நகைச்சுவையாக, “ 2025க்கு அடுத்து வரும் வருடம், கால்பந்து உலகக்கோப்பை நடைபெறும் ஆண்டு ” என பதிலளித்தார். 2026 – தமிழகம் குறித்து சொல்லுங்கள் எனக் கேட்கப்பட்டது.
அதற்க்கு இளையதளபதி விஜய், “ கப்பு முக்கியம் பிகிலே ” எனத் தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மறைமுகமாக தெரிவித்தார். வருகின்ற தேர்தலை மனதில் வைத்து அதற்கு ஏற்றவாறு முன் பணிகளை ஏற்கனவே அவர் துவங்கிவிட்டார். விரைவில் அடுத்தக்கட்ட அறிவிப்பும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.