கோலிவுட்டின் அசைக்க முடியாத உயரத்தில் தளபதி விஜய் தற்போது அமர்ந்துள்ளார். அவருடைய படம் மிகவும் சுமாரான விமர்சனமா லெற்றாலுமே 300 கோடியை அடித்துவிடுகிறது. அண்மையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் 600+ கோடிக்கு மேல் சம்பாதித்து வெற்றித் திரைப்படமாக அமைந்தது.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் ஸ்காட்லாந்து, சென்னை, ஹைதரபாத் என மாறி மாறி ஷூட்டிங்கில் ஈடுபட்டுள்ளார். அடுத்ததாக படக்குழு இலங்கை செல்லவும் உள்ளது. கோடை விடுமுறையில் படத்தை தியேட்டர்களில் எதிர்பார்க்கலாம். மறுபக்கம் பக்கம் விஜய் தனது அரசியல் பணிகளையும் துவங்கியுள்ளார்.
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் வெளிநாட்டில் சினிமா படித்தவர். சமீபத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் தன் முதல் படத்தை ஒப்பந்தம் செய்துள்ளார். இதில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சஞ்சய்க்கு தன் அப்பாவை விட விஜய் சேதுபதி வைத்து படம் செய்ய வேண்டும் என்பதே மிகவும் ஆசை என அவரது தாத்தா மற்றும் பிரபல இயக்குனர் சந்திரசேகர் ஒரு முறை நேர்காணலில் குறிப்பிட்டார்.
ஒரு முறை வருத்தத்தில் இருந்த முன்னணி அருண் விஜய்யிடம் அவருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் நல்ல விதமாக பேசியுள்ளார். அருண் விஜய் தன் பட வெற்றிகளைப் திருப்தி அடையயாததால் ஒரு கட்டத்தில் நடிப்பை விட்டுவிட்டு முழு நேரமாக தயாரிப்பாளராக களமிறங்கலாம் என முடிவு செய்துள்ளார்.
தயாரிப்பாளராக செல்லாளம் என முடிவு செய்த அருண் விஜய் தளபதி விஜய்யின் கால்ஷீட் வேண்டுமென அவரைச் சந்தித்த போது தளபதி விஜய், “ நீ சிறப்பான நடிகர். எண்ணவிட உனக்கு திறமை அதிகம் நான் அடிக்கடி என் மகனிடம் கூறியுள்ளேன். கொஞ்சம் பொறுமையாக இரு நிச்சயம் வெற்றிப்படங்கள் அமையும் ” எனக் கூறி அருண் விஜய்க்கு நம்பிக்கை ஊட்டியுள்ளார்.
அருண் விஜய் அதன் பின்னர் தல அஜித்குமார் அவர்களுடன் இணைந்து என்னை அறிந்தால் எனும் தரமான சம்பவத்தை செய்தார். மேலும் சில நல்ல படங்களைநத் தந்துள்ளார். இன்று அவர் இன்னும் நடிப்பில் தொடர்வதற்கு தளபதி விஜய்யும் ஓர் மிகப் பெரிய காரணம்.