இந்திய சினிமாவில் இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்புகளை பெற்ற திரைப்படங்களில் ஒன்று லியோ. விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா என ஓர் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. ஜனவரி மாதம் ஷூட்டிங்கை துவங்கிய லோகேஷ் கனகராஜ் & கோ திட்டமிட்டதற்கு முன்பாகவே பணிகளை நிறைவு செய்துவிட்டனர்.
40 நாட்களுக்கு முன்பாகவே படத்தின் முதல் காப்பியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரெடி செய்துவிட்டார். எஞ்சி இருந்த பேட்ச் வேலைகளை நிறைவு செய்துவிட்டு முழு படத்தை படக்குழு பார்த்துள்ளது. படத்தின் நாயகன் விஜய் இது குறித்து தன் கருத்துகளை கூறியுள்ளார்.
இளைய தளபதி விஜய் லியோ படத்தை பார்த்துவிட்டு மிகவும் திருப்தியானதாக கூறியுள்ளார். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜை பாராட்டியும் இருக்கிறார். இந்தச் செய்தியை தளபதி 68 படத்தை இயக்கவிருக்கும் வெங்கட் பிரபு தான் முதலில் வெளியிட்டார்.
லியோ எல்.சி.யூவில் அடங்குகிறதா இல்லையா என்பது இன்னும் தெளிவாக யாரும் உறுதி செய்யவில்லை. விஜய்யின் லியோ ஹாலிவுட் திரைப்படமான ‘ தி ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் ’ ரீமேக் எனக் கூறுகின்றனர். இதுவரை வெளியான அப்டேட்களும் அதையே மறைமுகமாக குறிப்பிடுகிறது. எதுவாக இருந்தாலும் தரமான ஆக்க்ஷன் படம் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
லியோ படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு குறைவாகத் தான் இருக்கிறது. ஏற்கனவே படக்குழு புரொமோஷன் பணிகளை துவங்கிவிட்டது. முதற் கட்டமாக அனைத்து மொழி போஸ்டர்களையும் ஒவ்வொன்றாக வெளியிட்டது. அடுத்தடுத்த அப்டேட்களும் வெளியாகிக் கொண்டே இருக்கும். ரீலீஸ் வரைக்கும் விஜய் ரசிகர்களுக்கு பெரிய விருந்து.
அடுத்ததாக இரண்டாவது பாடல், சென்னையில் பிரம்மாண்ட இசைவெளியீட்டு விழா, ஹிந்தியில் தனியாக ஸ்பெஷல் புரொமோஷன் என பெரிய திட்டத்தை கையில் வைத்துள்ளது லியோ படக்குழு. லோகேஷ் கனகராஜ் ட்ரைலரை செதுக்கியிருப்பார். அவரின் ஒவ்வொரு படங்களும் அதற்கு உதாரணம். தற்போது ரசிகர்கள் தீவிரமாக காத்திருப்பது அதற்கு தான்.