Monday, April 29, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாஅஜித்தை நேரில் சென்று பார்க்க முடியாது.. விளக்கும் கொடுத்துள்ள விஜய்.. அஜித் உடல்நிலை தற்போதைய நிலை...

அஜித்தை நேரில் சென்று பார்க்க முடியாது.. விளக்கும் கொடுத்துள்ள விஜய்.. அஜித் உடல்நிலை தற்போதைய நிலை இதுதான்.. !

இரு தின்களுக்கு முன்னர் தல அஜித்குமார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டு இருந்ததாக செய்திகள் வந்தன. இது ரசிகர்களை உலுக்கியது. உடனே அதனையடுத்து அவருக்கு மூளையில் கட்டி என வதந்திகளும் பரவின. அதெல்லாம் பொய் என உடனே அவரது தரப்பில் இருந்து மறுக்கபட்டுவிட்டது.

- Advertisement -

சென்னை அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித்குமார் வழக்கமான பரிசோதனைக்காக சென்றுள்ளார். அப்போது காது நரம்புக்கு கீழ் வீக்கம் இருந்ததால் அவர் உடனே அனுமதிக்கப்பட்டார். ஒரு சில மணி நேரங்களிலேயே அவர் சிகிச்சை முடிந்து நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டார். பயப்படும் அளவுக்கு பெரியதாக எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.

நடிகர் அஜித்தின் நிலையை அறிந்தப் பினர் பிரபலங்கள் யுவன் ஷங்கர் ராஜா, அரசியல் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி என பலர் நலன் விசாரித்து விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தனர். இன்று அஜித்தின் போட்டியாளர் மற்றும் நண்பரான தளபதி விஜய் நலன் விசாரித்துள்ளார்.

- Advertisement -

நடிகர் அஜித்தை தொலைபேசி மூலம் அழைத்து உடனக் நலம் எவ்வாறு உள்ளது என நலம் விசாரித்துள்ளார். அவரைக் காண முதலில் விஜய் நேரில் செல்வதாக தான் இருந்தது. ஆனால் அஜித் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் நடிகர் விஜய் தொலைபேசி மூலம் பேசியதாக தகவல்கள் வந்துள்ளது. இது தற்போது சமூக வலைத்தளத்தில் வரலாகி உள்ளது.

- Advertisement -

அஜித் உடல்நிலை சரியானதுடன் மருத்துவமனையில் செவிலியர்களுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டார். நேற்று டிஸ்சார்ஜ் ஆன அஜித் வீட்டில் ஓய்வு எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மாறாக மகனின் கால்பந்து போட்டிக்கு சென்றுள்ளார். இது அஜித் ரசிகர்களுக்கு தெம்பு ஊட்டும் செய்தி.

மகனின் கால்பந்து போட்டியை ஸ்டேடியத்துக்கு சென்று கண்டு களித்துள்ளார் அஜித்குமார். அங்கு சக பெற்றோர்களுடன் அமர்ந்து சிரித்துப் பேசும் வீடியோவும் வெளியாகியுள்ளது. அவர் எப்போதும் போல நடமாடுவது அவரது உடல்நிலை சீராக இருப்பதை காட்டுகிறது.

Most Popular