பாலிவுட் பாட்ஷா ஷாரூக் கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி திரைக்கு வர தயாராகியுள்ள திரைப்படம் ஜவான். இதில் ஷாரூக் கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இரைட்டை வேடங்களில் வரும் ஷாரூக் கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே மற்றும் நயன்தாரா வருகிறார்கள்.
அனைத்துப் பணிகளையும் நிறைவடைந்து நாளை உலகெங்கும் ரீலீஸ் ஆகவிருக்கிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போதே இதில் இளைய தளபதி விஜய் கேமியோ ரோல் செய்திருப்பதாக செய்திகள் பரவின. ஆனால் அதனை இதுவரை படக்குழு உறுதி செய்யவே இல்லை.
விஜய், ஷாரூக் கான் – அட்லீ படப்பிடிப்பின் இடைவேளையில் ஒரு நாள் இரவு சந்தித்துள்ளனர். அதனை வைத்து ரசிகர்கள் இத்தகு செய்திகளை கிளப்பினர் எனக் கூறி ஒரு சிலர் இதனை வதந்தி என உறுதி செய்தனர். ஆனால் மறுபக்கம் அப்படியே மாற்றி. பெரிய பெரிய சினிமா ஊடங்கள் உண்மை என மறுத்தனர்.
சென்னை கணேஷ் சினிமாஸ் தன் டிவிட்டர் பக்கத்தில் “ ஜவான் திரைப்படத்தில் தளபதி விஜய் ” எனப் பதிவிட்டு இருந்தனர். திரையரங்க உரிமையாளரே கூறும் போது உண்மையாக இருக்கும் என நம்பத் துவங்கினர் சிலர். ஆனால் நம்பிக்கையான வட்டாரங்களில் மீண்டும் இதனை மறுத்துள்ளனர்.
உண்மையாகவே கேமியோ செய்தது விஜய் அல்ல லியோவில் விஜய்க்கு எதிராக வரும் வில்லன் தான். முதலில் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய்யை ஒரு சின்ன கேமியோ செய்யுமாறு அட்லீ கேட்டுள்ளார். ஆனால் விஜய் அதற்கு சம்மதிக்காததால் அல்லு அர்ஜுனிடம் சென்றுள்ளார். அவரும் ஒத்துழைக்காததால் இறுதியாக சஞ்சய் தத்திடம் போனார் அட்லீ.
நாளை வெளியாகும் படத்தில் சஞ்சய் தத் கேமியோ ரோலில் தென்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் குழப்பம் இன்று வரை நீடிக்கிறது. நாளை படத்தின் முதல் காட்சி முடிவிலேயே அதிகாரபூர்வமான செய்தி கிடைக்கும்.