2023 இரண்டாம் பகுதியில் மிகவும் எதிர்பார்ப்புக்குள் அடங்கிய படங்களில் ஜெயிலர், ஜவான் ரீலீஸ் ஆகிவிட்டது. அடுத்து லிஸ்ட்டில் இருப்பது தளபதி விஜய்யின் லியோ திரைப்படம் தான். நெல்சன் & அட்லீ தங்களது பணிகளை சிறப்பாக செய்து முடித்துவிட்ட நிலையில் தற்போது அனைத்து பார்வைகளும் லோகேஷ் கனகராஜ் பக்கம் திரும்பியுள்ளது.
இளைய தளபதி விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அனுராக் காஷ்யப், மன்சூர் அலி கான் உள்ளிட்ட ஓர் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். ஷூட்டிங் வேலைகளை கடந்த மாதம் முடித்துவிட்டு படத்தின் முதல் பகுதி எடிட்டிங்கையே லோகேஷ் & கோ நிறைவு செய்துள்ளது.
வெறும் ஏழே மாதத்தில் இவ்வளவு பெரிய படத்தை கொடுத்த பட்ஜெட்டில் நிறைவு செய்ததற்கு லோகேஷ் கனகராஜ்க்கு நிறைய பாராட்டுகள். லியோ படத்தின் பணிகள் இதுவரை மிகவும் சுறுசுறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதே வேகத்தில் டிக்கெட் விற்பனைக்கும் தொடங்குகிறது.
லியோ படத்தின் வெளிநாட்டு உரிமத்தை அஹிம்ஸா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அவர்கள் முன்னர் தெரிவித்தது போலவே அமெரிக்காவில் இன்று டிக்கெட் விற்பனைகள் துவங்கி இருக்கிறது. வழக்கம் போல மல மலவென டிக்கெட்டுகள் காலி ஆகிக் கொண்டிருக்கிறது.
ஜெயிலர் திரைப்படம் இந்த ஆண்டு வசூலில் முன்னிலை வகிக்கிறது. அதனை ஷாரூக் கானின் ஜவான் நிச்சயம் முந்துவிடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த இரண்டு படங்களையும் விஜய் – லோகேஷ் கூட்டணி வென்றால் கோலிவுட்க்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக இருக்கும். மேலும் ஏற்கனவே டிமாண்டில் இருக்கும் லோகேஷ் கனகராஜ்க்கு இன்னும் மார்கெட் விலை உயரும்.
இந்த மாதம் 19ஆம் தேதி படத்தின் சக்திஶ்ரீ கோபாலன் பாடியுள்ள இரண்டாவது சிங்கிலை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. இந்த மாத இறுதியில் ஐடியா வெளியீட்டு விழா மற்றும் புரோமோஷன் பணிகள் என அதிரடியாக களமிறங்குகிறது லியோ. அக்டோபர் 19ஆம் தேதி திருவிழா தான்.