தளபதி விஜய் அடுத்தகட்டமாக அரசியலுக்குள் நுழைந்துள்ளதால் அவரது சினிமா கேரியரில் இன்னும் 2 படங்கள் மட்டுமே பாக்கியுள்ளது. இது என்னதான் அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்தினாலும், புகழின் உச்சியில் இருக்கும் சமயத்தில் அவர் மக்கள் பணிக்காக களமிறங்கி இருப்பது மரியாதையை அதிகரித்துள்ளது.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் எனும் படத்தில் தளபதி விஜய் நடித்துக் கொண்டுள்ளார். இந்தப் படத்துக்கு பிறகு இன்னும் ஓர் படம் ஒப்பந்தம் செய்துள்ளார். அதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த இரண்டு படங்களுக்கு கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் படம் சயின்ஸ் ஃபிக்ஷன் வகையில் அமைந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மேலும் சினிமா வாழ்கையில் தளபதி விஜய் இது போன்ற படங்களில் நடிப்பது முதல் முறை ஆகும். அக்டோபர் மாதம் துவங்கிய ஷூட்டிங் ஸ்காட்லாந்து, இலங்கை, சென்னை, ஹைதரபாத் ஆகிய படங்களில் தொடர்ந்து கொண்டே உள்ளது.
படத்தின் ரீலீஸ் தேதி இன்னுமும் சொல்லப்படவில்லை. தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஷூட்டிங் ஏப்ரல் முதல் வாரம் வரை நடைபெற இருக்கிறது. அதன் பிறகு போஸ்ட் புரொடக்ஷன் விரைந்து முடிக்கப்பட்டு ஜூன் – ஜுலையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.
வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா திரைப்படம் அஜித்தின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக உள்ளது. அதில் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் ஸ்டைலாக மாஸாக அமர்களப்படுதியிருப்பார். இதே போல தளபதி விஜய்க்கும் வெங்கட் பிரபு சிறப்பாக செய்ய வேண்டுமென ஆசைபடுகின்றனர் ரசிகர்கள்.
அவர்களின் ஆசையை அப்படியே நிறைவேற்றும் வகையில் படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் விஜய் வருகிறார். ஒன்று அப்பா கதாபாத்திரம், மற்றொன்று மகன். இதில் ஒரு கதாபாத்திரத்தில் அவர் வில்லனாக வருகிறார். இதற்கு முன் தளபதி விஜய் பிரியமுடன் படத்தில் வசந்த் மற்றும் அழகிய தமிழ்மகன் படத்தில் பிரசாத் என இருமுறை வில்லனாக நடித்துள்ளார்.
அதே போல ஒரு கதாபாத்திரத்தில் தான் அவர் மீண்டும் நடிக்கவுள்ளாராம். மேலும், படத்தில் அவருக்கு ஒரு மகள் உள்ளதாம், அதாவது மகன் விஜய்யின் தங்கை. அந்தக் கதாபாத்திரத்தை ஒளிப்பதிவாளர் மணிகண்டன் மகள் அபியுத்தா செய்கிறார். புத்தம் புது வகையில் உருவாகும் கோட் படம் நிச்சயம் ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு மேல் தான் இருக்கும்.