இளைய தளபதி விஜய் அவர்கள் சினிமாவில் தற்போது உச்சத்தில் உள்ளார். அவரது படங்கள் வந்தாலே குறைந்தது 300 கோடி நிச்சயம். அடுத்ததாக அவர் இந்த சினிமாவை விட்டு நகர்ந்து அரசியலுக்குள் களம் பதிக்கவுள்ளார். அதற்கான பணிகளை அவரும் அவரது ரசிகர்களும் மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த ஓர் ஆண்டாகவே விஜய் அவரது மக்கள் இயக்கத்தின் மூலம் மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த வருடம் மாணவர்களுக்கு உக்கத் தொகை, வெள்ள நிவாரணம் ஆகியவற்றுக்கு தளபதி விஜய்யே நேரில் சென்று உதவிகளை தன் கையால் செய்துள்ளார்.
இது மக்கள் மற்றும் அரசியல் வல்லுனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் அரசியலுக்குள் வரப்போகிறார் என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிந்தது. அடுத்த மாதம் 4ஆம் தேதி டெல்லி கட்சியைப் பதிவுச் செய்யப் போகிறார்கள். கட்சியின் பெயர் குறித்த தகவல்களும் சமூக வலைத்தளத்தில் வந்துள்ளது.
விஜய் தலைமை ஏற்க்கும் கட்சிக்கு பெயர் வைக்க மூன்று பெயர்களை இறுதியாக தேர்ந்தெடுத்தனர். அவை தமிழக முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் ஜானாயக கழகம், வெல்லும் தமிழக கழகம் ஆகும். இதில் ‘ தமிழக முன்னேற்ற கழகம் ’ பெயர் உறுதியாகியுள்ளது எனத் தகுந்த வட்டாரங்களில் சொல்கின்றனர்.
இந்தப் பெயர் மிகச் சிற்றபாக உள்ளது. மக்களும் இந்தப் பெயர் பொருத்தமாக இருப்பதாக விமர்சனங்கள் கொடுத்துள்ளனர். ஆனால் சிலர் இதில் இருக்கும் ஒரு குறையை சுட்டிக் காட்டி கேலி செய்து வருகிறார்கள். அதாவது விஜய்யின் புதியக் கட்சியின் ஆங்கிலச் சுருக்கம் TMK ஆகும். இதனைக் கூறும் போது DMK (திமுக) பெயரை உச்சரிப்பது போல உள்ளது.
இதனால் தேர்தலின் போது TMK – க்கு உங்களது ஓட்டுக்களைப் போடுங்கள் எனக் கூறப் போய் அது DMK என காதில் விழப் போகிறது என கலாய்த்து வருகிறார்கள். ஆனால் மக்கள் இதில் நிச்சயம் தெளிவாக இருப்பார்கள் என்பதால் இதெல்லாம் ஒரு பிரச்சசையே கிடையாது.