வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில் இன்று சென்னை அடுத்துள்ள பனையூரில் அக்கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளை அழைத்து நடிகர் விஜய் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது இந்த கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கும் ஒவ்வொரு நபர்களும் மற்றவர்களை தோழர்கள் தான் என்று அழைக்க வேண்டும் என கூறினார். நடிகர் விஜய் இந்த உத்தரவை பிறப்பித்திருப்பதாகவும் இனி கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் தோழர்கள் என்று அழைக்க வேண்டும் என்று கூறினார்.
இதைப் போன்று கட்சியில் சேரும்போது அனைத்து நபர்களும் ஒரு உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அது என்னவென்றால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் சேரும்போது ஒரு உறுதிமொழியில் எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.
அதில் நமது நாட்டின் விடுதலைக்காகவும் மக்கள் உரிமைக்காக போராடி உயிரிழந்த வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்ற வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தமிழ் மொழியை காக்க உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளையும் போற்று வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.
மேலும் இந்திய அரசமைப்பு சட்டத்தில் இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமையாகவும் சகோதரத்துவம் மத நல்லிணக்கம் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என்றும் மக்களுக்காக சேவகராக கடமை ஆற்ற வேண்டும் என்றும் உறுதிமொழி அளிக்க வேண்டுமாம்.
மேலும் சாதி, மதம், பாலினம் பிறந்த இடம் ஆகியவற்றில் உள்ள வேற்றுமை களைந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களுக்கு சம உரிமை கிடைப்பதற்காக பாடுபட வேண்டும் என்றும் அந்த உறுதி மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பிறப்போக்கும் எல்லா உயிருக்கும் என்ற சமத்துவ கொள்கையை கடைப்பிடிப்பேன் என்றும் கட்சியில் சேர்வதற்கு முன்பு உளமாற உறுதியளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.2026 ஆம் ஆண்டு தேர்தலுக்குள் 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.