Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாவிபரீத முடிவு.. ! அட்லீயுடன் இணைவதற்கு முன் மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் சேரும் விஜய்.. !

விபரீத முடிவு.. ! அட்லீயுடன் இணைவதற்கு முன் மீண்டும் தெலுங்கு இயக்குனருடன் சேரும் விஜய்.. !

இளையதளபதி என்ற பட்டத்துடன் மிகப் பெரிய சிம்மாசனத்தில் அமர்ந்து இருப்பவர் நடிகர் விஜய். இவ்வாண்டு கோலிவுட்டின் பெரிய எதிர்பார்ப்பான லியோ படத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார். ஆயுத பூஜைக்கு வெளியாகவிருக்கும் லியோ படத்தின் ஷூட்டிங் இன்னும் 40 முதல் 60 நாட்களுக்குள் நிறைவு பெற்றுவிடும்.

- Advertisement -

தளபதி விஜய் தன் அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட்டை பல இயக்குனர்களை வரவழைத்து கேட்டுக்கொண்டு வருகிறார். அண்மையில் அவரது அடுத்து படத்தின் செய்தி ஒன்று வெளியாகி சமூக வலைதளத்தை அதிர வைத்துக் கொண்டுள்ளது. வீர சிம்மா ரெடி பட இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக கூறுகின்றனர்.

அண்மையில் இயக்குனர் கோபிசந்த் விஜய்யிடம் ஓர் வலிமையான கதையைக் கூறியுள்ளார். நடிகர் விஜய்யும் முழு கதையையும் கேட்டு பிடித்துள்ளதாக பதில் அளித்துள்ளார். அவருடன் இணைந்து விஜய் படம் செய்வது ஏறத்தாழ உறுதியாகியுள்ளதாக தகுந்த வட்டாரங்களில் பேசிக் கொள்கின்றனர். இப்படத்தை தமிழ் சினிமாவின் மிகப் தலைசிறந்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.

- Advertisement -

இந்த நிறுவனம் இடையில் சில காலம் பெரிதளவில் படங்கள் செய்யாமல் இருந்தது. தற்போது மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய் நடிப்பார் என்ற செய்து சென்ற ஆண்டு பரவியது. நடிகர் ஜீவாவும் மேடை நிகழ்ச்சி ஒன்றில், “ சமீபத்தில் விஜய் சார் எங்களின் 100வது படத்தில் நடிப்பதாக உறுதியளித்துள்ளார். நாங்கள் அதற்காக இயக்குனர்களை தேடி வருகிறோம். வாய்ப்புக் கிடைத்தால் நாணும் அப்படத்தில் நடிப்பேன். அப்பா எனக்கு சம்பளம் கூட தரத் தேவையில்லை. ” எனச் சிரித்துக் கொண்டே கூறினார்.

- Advertisement -

இந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு கீழ் விஜய் பல படங்கள் செய்துள்ளார். அதில் 1996ஆம் ஆண்டு வந்த பூவே உனக்காக மிகவும் போற்றப்படும் திரைப்படம். விஜய் – கோபிசந்த் மலினேனி – சூப்பர் குட் பிலிம்ஸ் கூட்டணி கன்பார்ம் ஆகியுள்ளது, அதிகாரபூர்வமாக இல்லை. தன் பிறந்த நாளுக்கு எப்போதும் ரசிகர்களுக்கு தரமான அப்டேட் தருவார் விஜய். இம்முறை இந்தப் படத்தின் அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள். இந்தப் படத்திற்கு பின்பே அட்லியுடன் மீண்டும் இனையவுள்ளார் இளையதளபதி விஜய்.

Most Popular