Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய்- வெற்றிமாறன் கூட்டணி 100 சதவீதம் உறுதி.. மகிழ்ச்சியில் தளபதி ரசிகர்கள்

விஜய்- வெற்றிமாறன் கூட்டணி 100 சதவீதம் உறுதி.. மகிழ்ச்சியில் தளபதி ரசிகர்கள்

- Advertisement -

தற்போதைய காலத்தில் முன்னணி இயக்குனர்கள் என்றால் அதில் இடம்பெறுவது இயக்குனர் வெற்றிமாறன் , அட்லி மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தான். அதிலும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற திரைப்படங்கள் தான் பெரும் அளவில் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இதில் ஆடுகளம் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது .

அதேபோல்  இவர்களுடைய திரைப்படங்கள் வித்தியாசமான கதைகளாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறக் கூடியதாகவும் அமைந்து வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜய் வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதேபோல் இயக்குனர் வெற்றிமாறன் எப்பொழுது தளபதி விஜய் உடன் திரைப்படம் இயக்கப் போகிறார் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

- Advertisement -

இது எப்பொழுது சாத்தியமாகும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு தற்பொழுது ஒரு நற்செய்தி கிடைத்திருக்கிறது. இயக்குனர் வெற்றிமாறனின் நெருங்கிய நண்பரான டானாக்காரன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் தமிழ் ஒரு பேட்டியில் வெற்றி மாறனும் தளபதி விஜயும் இணைந்து ஒரு திரைப்படம் இயக்கப்பட இருக்கிறது. அந்தத் திரைப்படம் இயக்கப்படுவது உறுதி என்றும் கூறியிருந்தார் 

மேலும் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வடசென்னை திரைப்படத்தின் இரண்டாவது பாகம் மற்றும் வாடிவாசல் என்று மூன்று திரைப்படங்களை இயக்க உள்ளார். அதேபோல் தளபதி விஜயும் லியோ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதன் பிறகு அட்லி படத்தை முடிக்க உள்ளார்.  இந்த வேலைகள் எல்லாம் முடிந்த பிறகு தளபதி விஜய் நடிக்கப் போகும் திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குவார் என்று கூறியிருந்தார். இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Most Popular