பொன்னியின் செல்வன் 2 வெற்றிக்கு பிறகு தற்போது நடிகர் விக்ரம் மகிழ்ச்சியில் இருக்கிறார். 200 கோடி ரூபாய் வசூல் செய்த படங்கள் பட்டியலில் நடுங்கி விக்ரமின் மூன்று திரைப்படங்கள் தற்போது இடம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டதால் தங்கலான் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் 2 பணி முடிவடைந்து விட்டது. இதனால் நடிகர் விக்ரம் இன்று முதல் தங்கலான் படப்பிடிப்பில் ஈடுபடுகிறார்.
சென்னையில் நடைபெறும் ஷூட்டிங்கில் இன்னும் ஒரு மாதம் ஷூட்டிங் நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 80 சதவீத ஷூட்டிங் முடிவடைந்தது. மேலும் இந்த படம் 3டி திரைப்படம் என்பதால் அதிக கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற உள்ளது. இதனால் தங்கலான் திரைப்படத்தை தீபாவளிக்கு கொண்டு வர ஸ்டூடியோ கிரீன்ஸ் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
தங்கலான் திரைப்படம் நடிகர் விக்ரமின் திரைப்பட வாழ்க்கையில் திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கே ஜி எஃப் தங்க சுரங்கத்தில் நடைபெறும் அத்துமீறல்களையும் உழைப்பு சுரண்டல்களையும் மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப முடிவுடன் படக்குழு இருப்பதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சி இ ஓ தனஞ்செயன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தங்கலான் படத்தை நடிக்கும் ஹாலிவுட் நடிகர் விக்ரமின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து அவரை வெகுவாக பாராட்டி இருக்கிறார். இது சியான் விக்ரம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது