Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாஎடிட்டிங், டப்பிங் இல்லை.. முந்தைய படங்களை ஒப்பிட்டால் 3% கூட இல்லை.. தங்கலான் டீஸர் குறித்து...

எடிட்டிங், டப்பிங் இல்லை.. முந்தைய படங்களை ஒப்பிட்டால் 3% கூட இல்லை.. தங்கலான் டீஸர் குறித்து விக்ரம்

பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் தங்கலான். இப்படம் கடைசி கட்டப் பணிகளில் உள்ளது. அடுத்ததாக விரைவில் போஸ்ட் புரொடக்ஷனுக்கு செல்லவிருக்கிறது. அண்மையில் படத்தின் ரீலீஸ் தேதி அடுத்து ஆண்டு ஜனவரி 26 என படக்குழு அறிவித்தது.

- Advertisement -

நவம்பர் மாதம் தங்கலான் பட டீஸருடன் துவங்கியுள்ளது. சென்னையில் இன்று டீஸர் வெளியீட்டு விழா நடத்தி அதில் படக்குழு பங்கேற்று பேசியது. எதிர்பார்த்தது போலவே டீஸர் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. சண்டைக் காட்சிகள் தாறுமாறு. ஜி.வி.பிரகாஷ் இசையில் தன் பங்கை அருமையாக செய்துள்ளார்.

வரலாறு திரைப்படம் என்பதால் பார்வையாளர்களை அந்தக் காலத்திற்கு எடுத்துச் செல்லும் அளவிற்கான மேக்கிங்கை விட அதிகமாவே தரமாக இருந்தது. விக்ரம் மற்றும் மற்ற நடிகர்களின் கெட்டப்பலேயே அதன் நாம் காணலாம். கே.ஜி.எஃப் அதாவது கோசர் தங்கவாயிலில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம்.

- Advertisement -

பா.ரஞ்சித்தின் படங்களிலேயே இதில் தான் டீஸர் ராவாகா வந்துள்ளது. கலர் கிரேடிங் செய்யாமல் அப்படியே வெளியிட்டுள்ளது படக்குழு. மக்களுக்கு புதிய உணர்வைக் கொடுக்கும் நோக்கி இவ்வாறு செய்துள்ளது படக்குழு. நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விக்ரம் இப்படத்தில் தன் அனுபவத்தைப் பற்றி விவரித்துள்ளார்.

- Advertisement -

“ நான் இதற்கு முன் மிகவும் கஷ்டப்பட்டு நடித்தப் படங்கள் என்றால் பிதாமகன், இராவணன், ஐ. ஆனால் தங்கலானுடன் ஒப்பிட்டால் அவையெல்லாம் 3% கூட கிடையாது. ” என்றார் விக்ரம். மிகவும் உடலை வளைத்து சிரமப்பட்டு பல்வேறு கெட்டப்புகள் மாறி இதுவரை சிறப்பாக நடித்த நடிகர் சியான் விக்ரம். அவரே இதனை மிகவும் உயர்வாகக் கருதுகிறார் என்றால் நிச்சயம் படம் சிறப்பாகவே அமையும்.

மறுபக்கம் இயக்குனர் பா.ரஞ்சித் சார்பட்ட பரம்பரை படத்தை விட தங்கலான் படத்தில் தான் அதிகம் உழைப்பைப் போட்டுள்ளார் என விக்ரம் குறிப்பிட்டுள்ளார். ஒட்டுமொத்த படக்குழுவினருமே இதற்காக மிகவும் அதிகமாக பணியாற்றியுள்ளனர். டீசரில் காட்சிகள் எப்படி தத்ரூபமாக எடிட்டிங் இல்லாமல் இருந்ததோ அதே போல டப்பிபங்கிலும் படக்குழு புதிய முயற்சி எடுத்துள்ளது.

அதாவது இந்தப் படத்தில் எந்தவித டப்பிங்கும் இல்லாமல் கேமரா முன் நேரலையாக பேசும் வசனங்கள் தான் படத்தில் இடம்பெறும் எனக் குறிப்பிட்டுள்ளனர். இது புதியதோர் அனுபவத்தை நிச்சயம் வழங்கும். விக்ரமுடன் மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி திருவோத்து, ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அடுத்த ஆண்டு பொட்டியுஉம் பெரிய படங்களில் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்ட படமாக பட்டியலில் இணைந்துள்ளது.

Most Popular