Sunday, September 15, 2024
- Advertisement -
Homeசினிமாமேடையில் மோதி கொண்ட தங்கர்பச்சான் vs மாரி செல்வராஜ்- சாதி படங்கள் குறித்து பரபரப்பு பேச்சு

மேடையில் மோதி கொண்ட தங்கர்பச்சான் vs மாரி செல்வராஜ்- சாதி படங்கள் குறித்து பரபரப்பு பேச்சு

தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத பல திரைப்படங்களில் இயக்கி இருப்பவர் தங்கர் பச்சான். அவர் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பேசிய போது மாரி செல்வராஜ் அங்கிருந்தார்.

- Advertisement -

அவரை மறைமுகமாக சாடும் வகையில் தங்கர்பச்சான் தமிழ் சினிமாவில் தற்போது சாதி திரைப்படங்கள் அதிக அளவில் வந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர் சாதி ஒற்றுமையை வளர்க்கும் வகையில் படங்களை எடுக்க வேண்டுமே தவிர நீ என்னை அப்படி செய்து விட்டாய் என்று பழைய காயங்களை எல்லாம் தற்போது எடுத்தால் சமுதாயத்தில் ஒற்றுமை இருக்காது என்று கூறினார். சாதி பெருமை, சாதி பாகுபாடு ஆகியவற்றை சினிமா பேசக்கூடாது என்றும் சாதி ஒற்றுமையை தான் பேச வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

- Advertisement -

மேலும் மசாலா படங்களை போதைப் பொருட்களோடு ஒப்பிட்ட தங்கர்பச்சான் நல்ல சினிமாவை நேசித்தால் தான் பல கழிசடைகள் சினிமாவை விட்டுப் போவார்கள் என்று குற்றம் சாட்டினார் .

- Advertisement -

இதனை தொடர்ந்து பேசிய மாரி செல்வராஜ் தாம் கடலில் ஆழத்தில் நீச்சல் அடித்துக் கொண்டிருப்பதாகவும் எதிரே வரும் அலைகளைப் பார்த்து நான் திரும்பி வந்து விடக்கூடாது என்றும் அங்கேயே நீச்சல் அடித்து விழித்துக் கொள்ள தான் பார்க்க வேண்டும் என்று கூறினார்.

தற்போது ஒவ்வொரு மனதிற்கும் தாங்கள் செய்த,  நம்மை சுற்றி நடக்கின்ற விஷயங்கள் குறித்து மனதில் நெருடல்கள் ஏற்பட்டு இருப்பதாகவும், அவர்களை சாதி பாகுபாடுக்கு எதிராக பேச வைக்க வேண்டும் என்றால் என்னை போன்ற நபர்கள் தேவைப்படுகிறார்கள் என்றும் மாறி செல்வராஜ் கூறினார்.

மேலும் தாம் சந்தித்த வாழ்வியல் துன்பங்களை வைத்து தான் திரைப்படம் எடுப்பதாகவும்,தற்போது மக்களுக்கு அனைத்து விஷயங்களும் புரிவதால் இனி அனைவரும் அரசியல் நிச்சயமாக பேசுவார்கள் என்று மாரி செல்வராஜ் குறிப்பிட்டார். எப்படி அரசியல் பேசும் போது நீ இதை செய்யக்கூடாது நீ அதை பண்ணக்கூடாது என்று யாராலும் தடுக்க முடியாது என்றும் தங்கர் பச்சானுக்கு மாரி செல்வராஜ் மறைமுக பதிலடி கொடுத்தார்.

Most Popular