Friday, May 10, 2024
- Advertisement -
Homeசினிமாதனி ஒருவன் 2 அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர் ராஜா

தனி ஒருவன் 2 அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர் ராஜா

- Advertisement -

கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் மோகன்ராஜ் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் திரைப்படம் ரசிகர்களால் பெரும் அளவு கொண்டாடப்பட்ட ஆக்சன் திரில்லர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் கதாநாயகன் ஆன ஜெயம் ரவிக்கு கிடைத்த வரவேற்பிற்கு இணையாக வில்லனாக நடித்த அரவிந்த்சாமிக்கும் வரவேற்பு இருந்தது.

ஒருவருக்கு ஒருவர் சற்றும் சலிக்காமல் தாங்கள் உடைய கதாபாத்திரங்களை மிக மிக அழகாக நடித்து இருந்ததால் இத்திரைப்படம் நல்ல வெற்றியை அடைந்தது. 15 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மொத்தமாக 150 கோடி ரூபாய் வசூல்
வேட்டையை பெற்றது.

- Advertisement -

இந்தத் திரைப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா என்று சொல்லப்படும் இசையமைப்பாளர் ஆதி இசையமைத்திருந்தார். இவருடைய இசையும் இந்த திரைப்படத்திற்கு கூடுதல் மெருகு ஊட்டியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த வெற்றியால் இந்த திரைப்படத்தின் உடைய இரண்டாவது பாகமும் விரைவில் எடுக்கப்பட இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் தனி ஒருவன் திரைப்படத்தின் உடைய இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக தனி ஒருவன் திரைப்படத்தின் உடைய இயக்குனர் மோகன்ராஜ் கூறியிருக்கிறார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.
இதைத் தவிர இந்த திரைப்படத்தைப் பற்றிய எந்த தகவலும் தற்பொழுது வெளிவரவில்லை.

இந்த திரைப்படத்தில் யார் யார் நடிக்க இருக்கிறார்கள்? இது எப்படிப்பட்ட கதை களம் எங்கு எடுக்கப்பட போகிறது போன்ற எல்லா தகவல்களும் விரைவில் ஒன்றின் பின் ஒன்றாக வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதேபோல் தனி ஒருவன் திரைப்படத்தின் உடைய முதல் பாகத்தில் கதாநாயகியாக  லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருந்தார்.

இவருடைய நடிப்பும் இந்த திரைப்படத்தில் பாராட்டத்தக்க வகையில் இருந்தது. இதே கூட்டணி மீண்டும் இணைந்து நடித்தால் இந்த திரைப்படம் நிச்சயமாக ஒரு நல்ல வரவேற்பை பெரும் . பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் ஜெயம் ரவிக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது.

இதனால் இதற்குப் பிறகு அவர் தேர்வு செய்யும் எல்லா திரைப்படங்களும் இவருக்கு கிடைத்த இந்த பெயரை தக்க வைத்துக் கொள்ளும் விதத்தில் அமைய வேண்டும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையில் இந்த தனி ஒருவன் திரைப்படத்தின் உடைய இரண்டாவது பாகம் நடிகர் ஜெயம் ரவிக்கு ஒரு நல்ல வரவேற்பு பெற்று தரக்கூடிய படங்களில் ஒன்றாக இருக்கும்.

Most Popular